பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தரைச் சந்தித்தல் 曹5 தேர்வும் (அறிவியல் பாடம் சம்பந்தப்பட்டவை தவிர எழுதலாம் என்ற விதி இருந்தது. விலக்குரிமை (Exemption பெறுவதற்கு விண்ணப்பித்தேன். பி. எஸ்.சி. பட்டதாரி அதற்குப் போக முடியாதென்றும், அப்படி எழுதுபவர் பி. ஏ., பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் பதிவாளர் தெரிவித்தார். உடனே நான் எழுதினேன்; நான் ஆசிரியன்; மூன்றாண்டு அனுபவம் உண்டு. என் இடைநிலைத் தேர்வு சான்றிதழையும் (Intermediate Certificate) எல். டி. பட்டயத்தை இடைத் தரக் கல்வி சார்ந்த பயிற்சிச் சான்றிதழாகக் கருதிக் கொண்டும் என்னை பி. ஏ. தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும்' என்று. அதற்குப் பதிவாளரிடமிருந்து வந்த பதில்; ' பட்டமே பெறாதவர்க்குத்தான் இந்த விதி பொருந்தும், நீங்கள் தொடக்கத்திலிருந்தேஇரண்டுபட்டங்கள்பெற்றிருப்பதால் இந்த விதி உங்கட்குப் பொருந்தாது. இதனால் உங்களை பி. ஏ. தேர்வுக்கு அனுமதிக்க இயலாது' என்று. நான் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு எழுதினேன்! நான் ஆசிரியன், இந்த விதி ஆசிரியர்காக (Bonatide teachers) ஏற்பட்டது. ஆகவே எனக்குப் பொருந்தும். ஆதலால் என்னை அனுமதிக்க வேண்டும்' என்று வாதித்தேன். இதற்குப் பதிவாளர் விடுத்த பதில்; நீங்கள் கூறுவது. சரி தான். விதி அப்படி இருந்தாலும் அனுமதிக்காதது மரபொழுங்காகும் (Convention). ஆகவே அனுமதித்த தற்கில்லை," என்று. உடனே மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன்; ' இதுகாறும் நடைபெற்ற கடிதப் போக்கு வரத்துகளை ஆட்சிக் குழுவின் (Syndicate) ஆலோசனைக்கு வையுங்கள். அவர்கள் முடிவெடுக்கட்டும்'என்று. இதற்குப் பதிவாளரிடமிருந்து வந்த பதில்; உங்கள் கடிதங்களை ஆட்சிக் குழுவிற்கு முன் வைக்கப்பட முடியாது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.' என்று. உடனே நான் என் எல்லாக் கடிதங்களையும் அவற்றிற்குப் பதிவாளர் விடுத்த மறுமொழிகளையும் இயைபுபடுத்தி அச்சிட்டு எல்லா ஆட்சிக் குழு உறுப்ணபிர்