பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尘56 நினைவுக் குமிழிகள்-4 (ஹேமாப்ஜ நாயகி) வணங்கி ஆழ்வாரின் பத்துப் பாசுரங் களையும் மிடற்றொலி கொண்டு ஓதி உளங் கரை கின்றேன்.இத்திருக் கோயிலில் தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. இந்தப் பயணத்தில் 'போய பிழைகள், புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்' என்ற உணர்ச்சியைப் பெறுகின்றேன். இந்தத் திவ்விய தேசத்தில் வேதாந்த தேசிகனுக்கு ஒரு பெரிய சந்நிதி உள்ளது. இளமையில் அந்தச் சுவாமி இங்கு வாழ்ந்தமைக்குச் சுவாமியின் திருமாளிகையும் திருக்கிணறும் சான்றுகளாக நிற்கின்றன. திருக்கோயிலுக்கு அருகிலுள்ள ஒளஷ தாத்திரியில் (மருத்து மலையில்) பெரிய திருவடியும் ஹயக்கிரீவனும் சுவாமிக்கு நேரில் காட்சி தந்ததாக வரலாறு, ஆகவே, ஹயக்கிரீவன் ஸ்வயம்வியக்தமான’ (தானே தோன்றிய) திவ்விய தேசமாகின்றது. இத்தலத்து எம்பெருமான்மீது தேசிகன் வடமொழியில் தேவ நாயக பஞ்சாசத்' அச்யுதசதகம்’ என்ற இரண்டு நூல்களையும்: தமிழில் மும்மணிக் கோவை, பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், நவமணிமாலை ஆகிய ஏழு சிற்றிலக்கியங் களையும் அருளியுள்ளார். இவற்றையெல்லாம் அறிந்த வண்ணம் திருப்பாதிரிப் புலியூருக்குத் திரும்பி அன்றிரவே இருப்பூர்தியில் திருப்பதி வந்து சேர்கின்றேன். அடுத்த ஆண்டு (1966) பிப்பிரவரியில் திருக்கோவலூர் சேவை நடைபெறுகின்றது. காரைக்குடியிலிருந்து இராமேசுவரம் விரைவு வண்டியில் இரவு 8 மணிக்கு விழுப்புரம் வந்து சேர்கின்றேன். அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம்-காட்டுப்பாடி இருப்பூர்தியில் ஏறி சுமார் T3. இருப்.5 4. அநுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து இலங்கையை நோக்கி வந்த காலத்தில் ஒரு சிகரம் முறிந்து விழுந்ததாகவும் அதுவே இம்மலை என்பதாகவும் ஐதிகம்.