பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாட்டுத் திருத்தலப் பயணம் 玺荔7 6 - 30க்கு திருக்கோவலூர் நிலையத்தில் இறங்குகின்றேன். கையில் ஒரு சிறு பைதான்-மாற்று ஆடையுடன். ஆகவே பயணம் எளிதாயிற்று. பதினொரு மணிக்குத் திரும்பி இருப்பூர்தியைப் பிடித்து காட்டுப் பாடிக்குத் திரும்ப வேண்டியிருப்பதால் ஒரு கல் தொலைவு நடந்தேஆற்றின் குறுக்காக-திருக்கோவலூரை அடைகின்றேன். இருப்பூர்தி நிலையத்துக் கருகிலுள்ளது அரகண்ட நல்லூர். அதைக் கடந்து பெண்ணை ஆற்றில் இறங்கித் தீர்த்தமாடுகின்றேன்; வெள்ளப் பெருக்கு இன்மையால் பளிங்குபோன்ற நீரில் குளித்தது உடலுக்கு இதமாக இருந்தது. ஆற்றைக் கடந்து அதன் தென் கரையிலுள்ள திருக்கோவிலூரை அடைகின்றேன். திருக்கோவிலூர் ஒரு சிற்றுரே. இதில் மேலுTர், கீழுர் என்ற இரு பகுதிகள் உள்ளன. இரண்டு ஊர்களும் ஆற்றின் தென்கரையில் தான் உள்ளன. ஆற்றையொட்டி இருப்பது கீழுர். இந்த ஊரில் வீரட்டானேசுவரம் என்ற ஒரு பெரிய சிவத்தலம் உள்ளது. அப்பர் பெருமானும் காழிப் பிள்ளையாரும் பாடிய தலம் இது. சிவபெருமான் அரக்கர்களை வதைசெய்த எட்டு வீரட்டத் தலங்களில் இங்கு அந்தகாசுரனைச் சங்கரித்ததாக வரலாறு . மேலூரில்தான் திருமால் சந்நிதி உள்ளது; இதுதான் திரிவிக்கிரமன் கோயில் கொண்டிருக்கும் திரு ஆலயம். திரிவிக்கிரமன் நீர் வளமும் நில வளமும் மிக்க அழகான சூழ்நிலையில் கோயில் கொண்டிருக்கின்றான். ஆண்டவனின் உடலாக இருக்கும் அசித்தின் அழகினை இப்பகுதியில் கண்டு களிக்கலாம். முதலாழ்வார்கள் மூவரும் தி ரு ம ங் ைக யாழ்வாரும் இத்தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்திருப்பதின் நீர் வளம், நில வளங்கள் திருமங்கை யாழ்வாரின் பாசுரங்களில் அழகாகச் சித்திரிக்கப்