பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 நினைவுக் குமிழிகள் கி. பெற்றுள்ளன. தோப்புகளும் சோலைகளும் சூழ்ந்த அழகானப் பகுதியில் இவ்வூர் அழகாக அமைந்துள்ளது. தென்னந் தோப்புகள் கமுகந் தோட்டங்கள் மாஞ்சோலை கள் முதலியவற்றை எம்மருங்கும் காணலாம்! கோங்கரும்பு சுரபுன்னை குரவுஆர் சோலைக் குழாம்வரிவண்டு) இசைபாடும் பாடல் கேட்டுத் தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்' (கண்வளரும்-கணுக்கள் வளரும்; உறங்குவுமாம்) என்பது காண்க. கோங்கு அரும்புகளும் சுரபுன்னைகளும் குரவ மலர்களும் நிறைந்த சோலைகளில் கூட்டம் கூட்ட மாகவுள்ள வண்டுகள் பூக்களிலுள்ள மதுவினை யுண்டு. அந்தக் களிப்பினால் இன்னொலிகளை எழுப்புகின்றன. அந்த இசைப்பாடல்களின் இன்பச் சாறு பாயப் பெற்ற வயல்களிலுள்ள கரும்புகளின் கணுக்கள் வளர்கின்றன. வண்டுகள் பாடும் இசையைக் கேட்டு அஃறிணைப் பொருளாகிய கரும்பும் அசைவற்று நிற்பதாகக் கூறும் பாசுர நயம் எண்ணி எண்ணி அநுபவிக்கத் தக்கது. இன்னும் நம் கற்பனை சிறகுகள் கொண்டு பறக்கக் கூடுமாயின் ஈண்டுத் திருக்கோவலூர் எம்பெருமானையே கரும்பாகக் குறிப்பிட்டதாகவும் கொள்ளலாம். வண்டுகள் வெறும் இன்னொலிகளை எழுப்பாமல் முதலாழ்வார் களின் பாசுரங்களையே இன்னொவிகளாக எழுப்பினதாகக் கருதலாம். அமுதுாறும் அப் பாசுரங்களின் இன்பப் பெருக்கில் திளைக்கும் திருக்கோவலூர்த் தீங்கரும்பு (எம். பெருமான்) கண் வளர்கின்ற தாகவும் கருதலாம். 5. பெரிதிரு 2.10:4