பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாட்டுத் திருத்தலப் பயணம் 459, இங்ங்ணம் அவரவர்களுடைய பக்திக்கேற்றவாறு கற்பனை யும்வளரும்;அதில் கவிதையதுபவத்துடன் பக்தியநுபவமும் கலந்து ஊற்றெடுத்து நம்மைப் பேரின்பக் கடலில் கொண்டு செலுத்தும். பத்தியதுபவத்தின் கொடுமுடியைக் கண்ட திருமங்கையாழ்வார் திருக்கோவலூர்த் திரிவிக் கிரமனை இங்ங்ணம் எல்லாம் சிந்தித்து அநுபவித்திருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறு இல்லையல்லவா? முதலாழ்வார்கள் மூவரையும் கரும்பினைப் பிழியும் மூன்று ஆலை உருளைகளாகவும் அவர்களால் நெருக்குண்ட எம்பெருமானை நெருக்குண்ட இடமாகிய திருக்கோவலூர் அருகில் விளையும் கரும்பாகவும், அந்த எம்பெருமானின் செளலப்பிய குணத்தைச் சாறாகவும் வேதாந்த தேசிகர் குறிப்பிட் டுள்ளமை ஈண்டு நினைவுக்கு வந்து மகிழ்ச்சியூட்டு கின்றது. மேற்குறிப்பிட்ட ஆழ்வாரின் பாசுரமே இச் சுலோகத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும். திவ்வியப் பிரபந்தம் முதன் முதலாகத் தோன்றியது இத் திருக்கோவலுரரில்தான். முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்து அந்தாதி தொடுத்த தலமும் இதுவேயாகும். இந்த வரலாற்றை, பாவரும் தமிழால் பேர்பெறு பனுவல் பாவலர் பாதிதாள் இரவில் மூவரும் நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி? முகுந்தனைத் தொழுதநன் னாடு (முகுந்தன்-திருமால்) என்று போற்றிப் புகழ்ந்ததும் என் நினைவில் எழு கின்றது. வேதாந்த தேசிகர், பாட்டுக்(கு) உரிய பழையவர் மூவரைப் பண்(டு) ஒருகால் மாட்டுக்(கு) அருள் தரும் மாயன் மலிந்து வருத்துதலால் 6. தேகளிச் ஸ்துதி-சுலோகம்-7. 7. வில்லிபாரதம்-சிறப்புப் பாயிரம் -9.