பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒6G - நினைவுக் குமிழிகள்-4 நாட்டுக்(கு இருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க வீட்டுக்(கு) இடைகழிக் கேவெளி காட்டும்.அம் மெய் விளக்கே" (பழையவர்-முதலாழ்வார்கள்: மலிந்து அதிகமாக; மாடு-செல்வமாகிய ஆன்மா:மாயன்-திருமால்: இருள் செக அஞ்ஞானம் நீங்க; நான்மறை அந்தி-உபநிடதம்: நடை-வழி: வெளிஉபாயங்கள்) என்று இந்நிகழ்ச்சியைப் பாரரட்டியுள்ளதையும் நினைந்து பார்க்கின்றேன். இந்த நினைவுகள் மனத்தில் எழுந்த வண்ணம் ஊரின் நடுவேயுள்ள திருக்கோயிலுக்கு வருகின்றேன். கருவறை யில் வியந்தவர் வெருக் கொள விசும்பின் ஓங்கிய" உலகளந்த திரிவிக்கிரமனைக் காண்கின்றேன். கிழக்கு நோக்கிய திருமுகங்ெெ.ாண்டு சேவை சாதிக்கும் இப் பெருமான் பெயரளவிலேயன்றி வடிவிலும் விண்ணுற நிமிர்ந்து நிற்கும் திரிவிக்கிரமனாகவே காட்சி தருகின் றான். காஞ்சியில் உலகளந்த பெருமாள் கோயில் சுவரின் மீது செதுக்கியுள்ள சிற்பம் இந்தப் பெருமான் தனியே நிற்கும் வடிவமேயாகும். இவர் மரத்தாலானவர்.முகத்தில் நல்ல களை. எம்பெருமானின் ஒரு திருவடி மகாபலிச் சக்கரவர்த்தியின் தலைமீது வைத்த நிலையிலும் மற்றொரு திருவடி விண்ணை அளப்பதாகத் துக்கிய நிலையிலும் காணப்பெறுகின்றன. இரண்டடி நிலம் போக எஞ்சின ஒரடி நிலம் எங்கே? என்று மாவலியை வினவுவது போல் வலக்கையின் ஒருவிரல் நீட்டிய நிலையில் காணப் பெறுகின்றது. மாவலியை வெற்றி கொண்டஎ க்களிப்பால் இடக்கையில் இருக்க வேண்டிய சங்கினை வலக்கையில் ஏந்திய நிலையில் காணப்பெறுகின்றார் எம்பெருமான், 8. தே. பி. 89