பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாட்டுத் திருத்தலப் பயணம் 461 இந்தக் கோலத்தில் எம்பெருமானைக் நிலையில், ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து(து) எண்மதியும் கடந் (து) அண்ட மீது போகி இருவிசும்பின் ஊடுபோய் எழுந்து, மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர ஒடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.” (ஒண்மிதி-ஒரடி இட்டு; புனல் -ஆவரண நீர்; அவுணன்-மாவலி, எண்மதி-நினைத்திருக்கும் எண்ணம்; விசும்பு-ஆகாயம்; மதி-சந்திரன்; தாரகை-நட்சத்திரம் மலர்புரையும்-மலரை யொத்த} காணுகின்ற என்ற திருமங்கையார் பாசுரத்தை வாய் ஒதுகின்றது. இரண்டாவது சுற்றிலுள்ள தாயார் சந்நிதிக்குச் சென்று அவரையும் சேவிக்கின்றேன். இவர் திருநாமம் புஷ்ப வல்லித்தாயார் (பூங்கோவில் நாச்சியார்), வேறு வரலாறுகள் : ஆழ்வார்கள் வாழ்ந்த காலத் திற்கு முன்பாகவே திருக்கோவலூர் புகழ் பெற்றிருந்தது. சங்கப்புலவர்களை ஆதரித்து வந்த கடையெழுவள்ளல் களில் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி இவ்வூரைச் சார்ந்தவன். பெண்ணையாற்றங்கரையிலுள்ள பகுதி அக்காலத்தில் மலாடு என்ற பெயரால் வழங்கியது. மலையமான் திருமுடிக்காரி திருக்கோவலூரைத் தலை நகராகக் கொண்டு இந்நாட்டை ஆண்டு வந்தான் (அகம்,35). மேலும் பாரி மகளிர் அங்கவை சங்கவை என்பவர்களை மணம் புரிந்த தெய்விகன் என்ற அரசன் அரசோச்சிய இடமும் இத்திருக்கோவலூராகும். இவன் வழிவந்தவர்களே மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க . ہمی . ق: پس سحسیسی سیست-مسیحییر 9. திரு நெடுந் 35