பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 நினைவுக் குமிழிகள்.4 முனையரையர் முதலியவர்கள். தெய்விகன் மலையமான் திருமுடிக்காரியின் வழித்தோன்றல். ஒளவையார் இவ்வூரில் தனக்கு ஆதரவளித்த ஆயர் குல நங்கையர் இருவருக்கு மூவரசரை வரவழைத்துச் சிறப் பாகத் திருமணம் நடத்தி வைத்தாக ஒரு வரலாறு உண்டு. பொன்மாரி பெய்யும் ஊர் பூம்பருத்தி ஆடையாம் அந்நாள் வயலாகி ஆகும்.ஊர்-எந்நாளும் தேங்கு புக ழேபடைத்த சேதிமா நாடதனில் ஓங்குதிருக் கோவ லூர்' என்று ஒளவையார் பாடியதாக ஒரு தனிப் பாடலும் உண்டு. இன்னும் பாரி மகளிரின் திருமணம் பற்றி ஒளவை யார் பாடியதாக வேறு பல பாடல்களும் உள்ளன. இவை யாவும் இலக்கியப் புலவர்கட்து இன்பம் பயப்பதாயினும் உண்மையை அறிய விழையும் வரலாற்று அறிஞர்கட்குத் தலைவலியைத் தருபவை. மேலுரரை விட்டுக் கீழுரிலுள்ள வீரட்டனாரையும் சேவித்து ஆற்றைக் கடந்து வரும்போது ஆற்றின் நடுவில் வீரட்டானேசுவரர் கோயிலுக்கருகில் ஒரு பெரும் பாறை யைக் காண்கின்றோம். இப்பாறையின் மீதுள்ள கோயிலும் அதனை அடைய அமைந்துள்ள படிக்கட்டுகளும் ஓர் இடைச்சியால் கட்டப் பெற்றவை என்று கூறுவர் அப்பகுதி மக்கள். ஆகவே அப்பாறை இடைச்சிக் குறுை இடைச் சிக் கல்' என்று வழங்கப்பெறுகின்றது, வெண்ணைய் தனிப்பாடல் திரட்டு (கழக வெளியிடு)- முதற் பகுதி-68.