பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடு நாட்டுத் திருத்தலப் பயணம் 463 உருகும் முன் பெண்ணை பெருகும் என்பது ஒருபழமொழி. ஒரு சமயம் இடைச்சி ஒருத்தி திருக்கோவலூரிலிருந்து ஆற்றைக் கடந்து வந்தபோது அக்கரையில் இறங்கும் போது நீரே இல்லாதிருந்த ஆற்றில் இக்கரையை அடை யும் முன்னரே வெள்ளம் பெருகியதாகவும், அவ் விடைச்சி அப் பாறையில் ஒதுங்கி நின்று தப்பித்த தாகவும். அவளே அச்சிவன் கோயிலைக் கட்டிப் படி களை அமைத்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி வழங்கி வருகின்றது. அடுத்து ஆற்றின் வடகரையிலுள்ள அறையணி நல்லூர் (இஃது அரகண்ட நல்லூர் என்று வழங்கப் பெறு கின்றது) அறையணி நாதரையும் அவரது துணைவி அறையணி நாயகியையும் கண்டு வழிபடுகின்றேன். இருப்பூர்தி நிலையத்திலிருந்து சாலை வழியாகத் திருக்கோவலூருக்குச் செல்லும் வழியில் பிருந்தாவனம்" என்ற ஓர் இடத்தில் மாத்வ சுவாமிகள் மடம் ஒன்று உண்டு. நாட்டின் பல பகுதியிலுள்ள மக்கள், சிறப்பாக மாத்வர், இங்கு வந்து ஆசி பெற்றுச் செல்வர். மக்கட் பேறு இல்லாதவர்கள் இங்கு முக்கியமாக வந்து ஆசி பெறுவதுண்டு. பகல் 11 மணிக்கு இருப்பூர்தி நிலையத் திற்கு வந்து வண்டியேறி திருப்பதி வந்து சேர்கின்றேன்.