பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-21458. தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் எம்பெருமானைப் பல்வேறு விதமாக அநுபவிக்* லாம். அவற்றுள் ஒன்று அவன் உகந்தருளின திவ்விய தேசத்திற்கு திருத்தலப் பயணம் மேற்கொள்வதாகும். தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் 22. இவற்றை இரண்டு சுற்றில் சேவித்து நிறைவு செய்தேன். முதல் சுற்று : 1966 சனவரித் திங்களில் என் அரிய நண்பர் வடமொழிப் புலவர் திரு. சீநிவாச வரதன் (திருவேங்கடவன் பல்கலைக் கழகக் கீழ்த்திசை ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினவர்) அவர்களின் துணைகொண்டு என் தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தின் முதல் சுற்று தொடங்கியது. முதலில் இருவரும் காஞ்சிக்கு வந்தோம். காஞ்சி' என்று வழங்கப் பெறும் காஞ்சிபுரம் மிகவும் முக்கியமானது. இதனை வேதாந்த தேசிகர் காசிமுத லாகியநன் னகரி யெல்லாம் கார்மேனி அருளாளர் கச்சிக் கொவ்வா." என்று புகழ்வர். அருளாளர் கச்சி என்று அன்பாக தேசிகர் புகழ்வதைப் போலவே, ஏழை ஏதலர்களின் துரயr மனத்தில் கஞ்சி வரதப்பன்' நிலைத்து வாழ்கின்றான். வரதப்பனுடன் ஊரும் சேர்ந்து வாழ்கின்றது. "கஞ்சி வரதப்பா!' என்றால் எங்கு வருதப்பா?’ என்று கேட்கும் சொற்றொடர்கள் நாம் கேட்டுப் பழகியவையன்றோ? 1. தே. பி. 237