பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 465 (1) குகை நரசிம்மரைச் சேவித்த நிலையில் (பெருமாள் கோயிலில்) சில படிகள் ஏறி ஒரு சிறு மண்டபத்தை அடைகின்றோம். இம் மண்டபத்திலிருந்து 24படிகள் ஏறிக்கடந்து அத்திகிரியை அடைகின்றோம். இந்தப் படிகளை ஏறிச் செல்லுங்கால் எம்பெருமான் இவ்வுலகைப் படைத்த 24 தத்துவங்கள் நினைவிற்கு வரு கின்றன. அவை தந்மாத்திரைகள் 5; ஞானேந்திரியங்கள் 5; கருமேந்திரியங்கள் 5: பூதங்கள் 5: ஆக இவை 26, இவற்றுடன் பிரகிருதி 1, மகான் 1, அகங்காரம் 1, மனஸ் 1 ஆகிய நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. (இவற்றுடன் புருடன் (சீவான்மா) 1. மகா புருடன் (பரமான்மா) 1 சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது. மேலும் ஆறு படிகளை ஏறிக் கடந்து அத்திகிரி அருளாளனின் கருவறைக்கு வருகின்றோம். நீண்டு உயர்ந்து நின்ற திருக்கோலத்தில் தங்கக் கிரீடமும் தங்கக் கவசமும் அணிந்த நிலையில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கும் பேரருளாளனையும் அடுத்து பெருந்தேவித் தாயாரையும சேவித்து அவருடைய திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். (2) அடுத்து வரதராசர் கோயிலிலிருந்து முக்கால் கல் தொலைவிலுள்ள அட்டபுயகரம் வருகின்றோம். இங்குள்ள மூலவர் எட்டுத் திருக்கைகளையுடையவர். :தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் 'அட்டபுயகரத்தான்?’ என்பது பேயாழ்வாரின் திருவாக்கு. "எட்டுப்படையாவன : வாளி, வில், கதை, திருச்சங்கு, 2. பெருமாள் கோயில்-வரதராசர் கோயில்: கோயில்-திருவரங்கம் பெரிய கோயில்; திருமலை-திருவேங்கடம், 3. மூன்-திருவந். 99 தி-36