பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 நினைவுக் குமிழிகள்-4 வாள், திருவாழி, கேடயம். மலர் ஆகியவை. நின்ற திருக் கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு சேவை சாதிக்கும் ஆதிகேசவப்பெருமாளையும், தனிக் கோயில் கொண்டிருக்கும் அலாமேல் மங்கைத் தாயாரையும் சேவிக்கின்றோம். நாம் வந்த போது பகல்பத்து-இராப் பத்து உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. முன் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணியிருந்த உற்சவர் ஆழ்வார் ஆசாரியர்கள்-இவர்களையும் சேவிக்கின் றோம். திருக்கோயிலை விட்டு வெளி வந்தபோது திருத்தலப்பயணத்தை மேற்கொண்டிருந்த காரைக்குடி ராய. சொ. கானாடு காத்தான் C. W. CT.V. வெங்கடா சலம் செட்டியாரையும் சந்தித்தோம். (3) அடுத்து இச்சந்நிதிக்கு வடக்கில் அரை ஃபர் லாங் தொலைவில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலுக்கு (யதோத்காரி) வருகின்றோம். இது காஞ்சியில் பழமையான கோயில். சங்க இலக்கியத் தில் சுட்டப்பெறும் திருவெஃகா என்பது இத்திருக் கோயிலே. இங்கு வந்து மேற்கு நோக்கிய திருமுக மண்டலங் கொண்டு புயங்கசயனமாக இடக்கையைத் தலையணையாக்க கொண்டு சேவை சாதிக்கும் சொன்ன வண்ணம் செய்த பெருமாளையும், தாயார் கோமளவல்லி நாச்சியாரையும் சேவிக்கின்றோம். உற்சவர் கண்டாரை ஈர்க்கும் திருமேனியையுடையவர். ஐம்பொன் கலப்பில் பொன் சற்று அதிகமாக இருப்பதால் பேரொளியில் திகழ் கினறார். இங்குள்ள திருக்குளத்தில் தான் பொய்கையாழ் வார் அவதரித்தார். திருமழிசையாழ்வார். அவரது சிடர் கண்ணிகண்ணன் இவர்களின் வரலாற்றுச் சிறப்புடையது இத்திருத்தலம். (4) பின்னர் திருத்தண்கா என்ற திவ்விய தேசத் திற்கு வருகின்றோம். இஃது அட்டபுயகரத்திலிருந்து மேற்குத் திசையில் 2 ஃபர்லாங் தொலைவில் உள்ளது.