பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 4.67 இத்திவ்விய தேசம் வேதாந்த தேசிகரின் பிறப்பிடம். இத் திருக்கோயில் சற்றுப் பெரியது. மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் தீபப்பிரகாசரையும் (விளக்கொளிப் பெருமாள்) மரகதவல்லித் தாயாரையும் வணங்குகின்றோம். இத்தலத்து எம்பெருமான் பண்டைக் காலத்தில் சயனத் திருக்கோல மாக எழுந்தருளியிருந்ததாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தாலும், அரும்பத உரையினாலும், மற்றும் சில குறிப்புகளாலும் அறியக் கிடக்கின்றது. (5) அடுத்து நாம் சேவித்தது வேளுக்கை என்பது வேளிருக்கை மருவி வேளுக்கை யாயிற்று. வேதாந்த தேசகர் பணித்த துதியொன்றில் இதைக் காமாலிகா என்று வழங்குவர். காமாஸிகா = காம + ஆளிகாவிருப்பம் பற்றி நிற்கும் இடம். விளக்கொளிப் பெருமாள் சந்நிதியிருந்து தென்திசையில் 4பர்லாங்கல் தொலைவி லுள்ளது. நான் சென்றபோது கைங்கரியம் நடைபெறாத திருக்கோயில்; சிதைந்த நிலையில் இருந்தது. இச்சந்நிதி யின் எம்பெருமான் ஆள் அழகிய சிங்கர் (முகுந்த நாயகன்) நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவரையும் வேளுக்கைவல்லித் தாயாரையும் வணங்குகின்றோம். (6) திருப்பாடகம் (பாண்டவ தூதர் சந்நிதி) பெரிய காஞ்சிபுரத்தில் ஞானப்பிரகாசர் திருமடத்திற்கு அருகி லுள்ளது. பாடு + அகம் பாடகமாயிற்று. பெருமை தோற்ற எழுந்தருளியிருக்கும் இடம் என்பது இதன் பொருள். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருக் கும் திருக்கோலத்தில் தேவை சாதிக்கின்றார் பாண்டவ தூதர். இவரையும் உருக்குமிணி, சத்தியபாமை என்ற திருத்தாயார்களையும் வணங்குகின்றோம். (7) கிலாத் திங்கள் துண்டம் என்ற திவ்விய தேசம் காஞ்சி ஏகாம்பர நாதர் திருக்கோயிலின் முதற்சுற்றில் உள்ளது.