பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*6教 நினைவுக் குமிழிகள்-2 நீரூரும் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணா நிலாத்திங்கள் துண்டத்தாய், தின்னைத்தேடி ஒருரும் ஒழியாமே ஒற்றித் தெங்கும் உலகமெலாம் திரிதந்து நின்னைக் காண்பான் தேரூரும் நெடுவீதி பற்றி நின்றேன்." என்ற அப்பர் பெருமானின் திருப்பாடலை ஒதுவார் 'நிலாத்திங்கள் துண்டத்தான் சிவபெருமானே என்று தினைப்பது இயல்பு. ஆனால், அவர்கள் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்த பின்னர்த் தம் தவற்றைத் உணர்வர். இந்த எம்பெருமான்- கிலாத் திங்கள் துண்டத்தான் என்ற திருநாமத்தைக் கொண்டவர்-ஏழு தலை நாகத்தைக் குடையாகக் கொண்டு மேற்குநோக்கிய திருமுக மண்டலத் துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவரையும் இவர் அருகில் உள்ள நேரொருவர் இல்லா வல்லித் தாயாரையும் சேவிக்கின்றோம். இந்த எம்பெருமா னுக்கு ஒரு சைவரே கைங்கரியம் செய்து வருகின்றார். "மறந்தும் புறந்தொழா வீர வைணவர்கள் இந்தச் சந்நிதிக்கு வருவதில்லை. (8) திருக்கள்வனூர்: இத்திவ்விய தேசம் பெரிய, காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் திருக்கோயிலினுள் உள்ளது. இந்த எம்பெருமான் நுழைவாயிலின் இடப்புறச் சுவரிலுள்ள மாடம் ஒன்றில் எங்கோ திருடிவிட்டு ஒளிந்து கொண்டிருக்கும் கள்வனைப் போல் ஒளிந்து கொண் டிருப்பதைக் காண்கின்றோம். இது கருதியே இவரைக் கேள்வா!' என்று ஒரே தொடரில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தார் போலும்! 'பாம்பின் கால் பாம்பறியும் என்றவாறு கள்வர் தலைவரான இந்த ஆழ்வாருக்குத்தான் இவர் கிடைத்தார். வேறு ஆழ்வார் 4. அப்பர் தேவாரம் - 6.25 :9 ச. திருநெருந்.8.