பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 金む 昇 கட்கு இந்த எம்பெருமான் கிட்டவில்லை. திருக்குருகூரில் திருப்புளியாழ்வாரின்கீழ் இருந்து கொண்டு மானசீகமாக மங்களாசாசனம் செய்த நம்மாழ்வாரையும் அவர் பாசுரங் களில் அகப்படாது ஏமாற்றிவிட்ட "கள்வன்’ இந்த எம்பெருமான். இந்தத் திவ்வியதேசமும் தேவதாந்தரம் சம்பந்தப் பட்டதென்று வீரவைணவர்கள் தலைகாட்டப் பெறாதது. எம்பெருமான் ஆதி வராகப் பெருமாளையும தாயார் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் சேவிக்கின்றோம். என் நண்பர் சீநிவாசவரதனும் இந்த இரண்டு திவ்விய தேசச் சேவையைப் புறக்கணித்து விட்டார் . (9) திருஊரகம் : பெரிய காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையத்தருகில் உள்ளது உலகளந்த பெருமாள் சங்கி தி இத்தலத்து எம்பெருமான் உரக வடிவமாகவும் சேனை சாதிப்பதால் திருஉஊரகம் என்ற இப்பெயர் ஏற்பட்டது என்பர். உரகம்-பாம்பு. கருவறைக்கு முன்பாக இடப் புறச் சுவரில் உரக வடிவமாக இருக்கின்றார் இந்த எம்பெருமான். கருவறையில் திரிவிக்கிரம வடிவில் சேவை சாதிப்பவர் உலகளந்த பெருமாள். இவர் மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவரைச் சேவிக்கின்றோம். (10) திருக்காரகம்: உலகளந்த பெருமாள் சந்நிதி யின் திருச்சுற்றில் உள்ள ஒரு சிறிய மாடக் கோயில். தாயார் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. எம்பெருமான் கருணாகரப் பெருமாளையும் தாயார் ப. த் ம | ம ணி காச்சியாரையும் சேவிக்கின்றோம். எம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய திரு முக மண்டலம் கொண்டு காட்சி தருகின்றார். மேகத்தின் தன்மைகள் போன்றவற்றைக் கொண்ட திருக்குணங்கள் நிறைந்த எம்பெருமான் கோயில்கொண்ட தலமாதல் பற்றி இதற்குக் காரகம்’ என்ற திருநாமம் பெற்றதாகக் கூறுவர் பெரியோர்.