பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 நினைவுக் குமிழிகள்-4 (11) திருநீரகம் : உலகளந்த பெருமாள் சந்நிதியின் வடக்குத் திருச்சுற்றில் உள்ள சந்நிதி. நீரின் தன்மை யுடையவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கும். தலமாதல் பற்றி நீரகம்’ என்று திருநாமம் பெற்றதாகப் பெரியோர் பணிப்பர். இந்தத் திவ்விய தேசத்துப் பெருமான் ஜகதீசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு நிலமங்கை வல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இவர்களை வணங்குகின்றோம். (12) கார்வானம் : இதுவும் உலகளந்த பெருமாள் சந்நிதியில் உட்சுற்றில் உள்ள ஒரு சிறு மாடக் கோயில். திருக்கோயிலைக் கடந்தவுடன் வலப்புறமாகத் திருச் சுற்றில் அமைந்துள்ளது. இதிலுள்ள எம்பெருமான் கள்வர்: நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். தாயார் கமலவல்லி நாச்சியார் இவர்களைச் சேவிக்கின்றோம். (13) அடுத்தது நாம் சேவிப்பது திருபவள வண்ணம். இது காமாட்சி அம்மன் சந்நிதிக்கு அருகில் (மேற்கே). சென்னைப்பேருந்து வரும் வழியில் உள்ளது. இத்திருக் கோயிலின் எம்பெருமான் பவள வண்ண ன் நின்ற திருக் கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றான். தாயார் பவள வல்லி நாச்சியார் . இருவரையும்சேவிக்கின்றோம், (14) வைகுண்டப் பெருமாள் சந்நிதி : ஆழ்வார் (திருமங்கையாழ்வார்) பாசுரத்தில் பரமேச்சுவர விண்ண கரம் என்று காணப்பெறும் . பரமேச்சுவரன் (பரமபத நாதன்- தேவாதி தேவன்) எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசம் ஆதல்பற்றிப் பரமேச்சுர விண்ணகரம்’ என்று வழங்கி வருகின்றது. இது பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. இதனைக் கட்டுவித்தவன் பரமேசுவரவர்மன் என்ற பல்லவ மன்னன், இவனுடைய தந்தை இராஜசிம்மன்.