பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 471 இவன் காஞ்சி கைலாச நாதர் கோயிலை நிறுவியவன். இரண்டு திருக்கோயில்களும் நீலப்பலகையின் பாதுகாப் பில் உள்ளன. இரண்டும் சிற்பக் கலைக்குப் பேர் போனவை. வைகுண்டப்பெருமாள் சந்நிதியில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமான் பரமபதநாதன். இவன் பரமபதத் தில் வீற்றிருப்பது போல் இருந்த திருக்கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிப் பவன். தாயார் வைகுண்டவல்லி இருவரையும் சேவிக் கின்றோம். (15) மாலை ஐந்து மணிக்கு மேல் காஞ்சியிலிருந்து தென்மேற்குத் திசையில் சுமார் 12 கி.மீ. தொலைவி லிருக்கும் திருப்புட்குழி என்ற திவ்விய தேசத்திற்கு இட்டு வருகின்றார் என் நண்பர் கே. சீநிவாசவரதன். பேருந்தி னின்றும் இறங்கிக் குறுக்குச் சாலை வழியாக 4ஃபர்லாங் தொலைவு நடந்துதான் இத்திவ்விய தேசத்தை அடைதல் வேண்டும். பெரிய உடையார் என வழங்கும் சடாயுவைத் தகனம் செய்த இடம். இதனால் புட்குழி என்ற பெயர் ஏற்பட்டது என்பர் (புள்-சடாயு). இங்கு எழுந்தருளி யிருக்கும் எம்பெருமான் விஜயராகவப் பெருமாள். இவர் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவரது இடப் பக்கத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருபவர் தாயார் மரகதவல்லி. இருவரையும் சேவித்துத் திரும்பு கின்றோம். திருப்பதியில் வக்கீல் தொழில் புரியும் என் நண்பர் திரு. விஜயராகவன் இவ்வூரைச் சார்ந்தவர். இத்திருக் கோயில் பட்டாச்சாரியாரின் முதல் மனைவியின் திருக் குமாரர். பாட்டி வீடு திருப்பதி. இவர் தமிழ் பேசும் வைணவர். இவர் திருப்பதி கலாச்சாரச் சங்கத்தின் தலைவராகச் சில ஆண்டுகள் பணியாற்றினவர். தமிழ்ப் பற்று மிக்கவர். இவர் சொன்னது; 'என் தந்தையார்