பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47罗 நினைவுக் குமிழிகள்.4 இரண்டாது மனைவியை மணந்து கொண்ட பிறகு தாயை இழந்த நிலையில் உள்ள எனக்கு இத்திருக்கோயில் பிரசாதம் வழங்கி 'இதுதான் என்னால் உனக்குத் தர முடிந்த சொத்து' என்று கூறி என் பாட்டி வீட்டிற்கு அனுப்பினார். அந்தப் பிரசாதத்தின் பலத்தால் நான் வக்கீல் படிப்புவரைப் படித்து இப்போது நன்றாகச் சம்பாதிக்கின்றேன்’ என்று. இந்தத் திவ்விய தேசத்திற்கு வந்தபோது இது என் நினைவிற்கு வருகின்றது. (16) மறுநாள் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு மாமல்லபுரம் வருகின்றோம் நாங்கள் இருவரும்கடல் மல்லைக் கிடக்கும் கரும்பாகிய தலசயனப் பெருமாளைச் சேவிக்கும் நோக்கத்துடன். பேருந்து கோயில் வாசலிலேயே எங்களைக் கொண்டு வந்து சேர்க் கின்றது. நேராகக் கோயிலை அடைகின்றோம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு புயங்க சயனத்தில் சேவை சாதிக்கும் தலசயனத்துறைவாரையும் சந்நிதிக்கருகே தனிக்கோயிலில் உள்ள நிலமங்கைநாச்சியாரையும் சேவிக் கின்றோம். "எம்மானை க் கண்டு கொண்டேன், கடிபொழில்சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே (2. 5:3) என்ற திருமங்கை மன்னனின் உணர்ச்சியையும் பெறு கின்றோம். விரைவாக ஊரைச் சுற்றியுள்ள சிற்பங்களைக் கண்டுகளிக்கின்றோம். (17) அடுத்து, பேருந்தில் ஏறி திருஇட எந்தை' என்ற திருத்தலத்திற்கு வருகின்றோம். இத்தலத்து எம்பெருமான் தனது தேவியை இடப்பக்கத்தில் தாங்கிக் கொண்டிருத்தலால் இத்தலம் திரு இட எந்தை (திருஇலக்குமி) என்ற திருநாமம் பெற்றது. பேருந்து இறக்கிய இடத்திலிருந்து 3 ஃபர்லாங் தொலைவு நடந்து திருக்கோயிலை அடைகின்றோம். எம்பெருமான்-திருவிட எந்தை-கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் அகில வல்லித் தாயாரைத் தமது இடக்