பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 473 கரத்தில் ஏந்திய நிலையில் பரம ரசிகராய்ச் சேவை சாதிக்கும்மூலவர் ஆதிவராகப்பெருமாளை உளமாரத் துதிக் கின்றோம். உற்சவர் நித்திய கல்யாணப் பெருமாளும் கோமல வல்லித்தாயாரும் திருக்கல்யாண அவசரத்தில் எழுந்தருளியிருக்கும் நிலையில் அவர்களையும் சேவிக் கின்றோம். (18) திருவிட எந்தையிடம் விடை பெற்றுக் கொண்டு ஒரு பேருந்தில் ஏறி போதுமோ நீர்மலைக்கு என்னும்' என்று பரகாலநாயகி (திருமங்கையாழ்வார்) பயணம் எடுத்ததுபோல் திருநீர்மலைக்குப் புறப்படுகின்றோம். பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு குதிரை வண்டியைப் போகவும் வரவும் அமர்த்திக் கொண்டு 3-கல் தொலைவிலுள்ள திருநீர் மலையை அடைகின்றோம். அடிவாரத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் tர்வண்ணப் பெருமாளையும், அணிமாமலர்மங்கைத் தாயாரையும் சேவிக்கின்றோம். மலையின் மீதேறி சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய திருமுகமண்டலங் கொண்டு சேவை சாதிக்கும் அரங்கநாதரையும், திருச் சுற்றில் கிழக்கு நோக்கிய திருமுகமண்ட மண்டலங் கொண்டு சேவை சாதிக்கும் சக்கரவர்த்தித் திருமகன் அழகியசிங்கர் (சந்தான நரசிம்மர்) உலகளந்தபெருமாள் (திரிவிக்கிரமன்) இவர்களைச் சேவித்துத் திரும்பு கின்றோம். வந்த குதிரை வண்டியிலேயே பல்லாவரத் திற்குத் திரும்புகின்றோம். அங்கிருந்து அன்றிரவே காஞ்சிக்கு வந்து மறுநாள் காலை திருப்பதி திரும்பு கின்றோம். என் நண்பர் கே. சீநிவாசவரதனின் புரு ஷ 6. பெரி திரு. 2. 7:8 இந்த நண்பர் இன்று (12-4-90) இல்லை. ஐந்து ஆண்டுகட்கு (1985) முன் திருநாடு அலங்கரித்து விட்டார்