பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 நினைவுக் குமிழிகள்-4 காரத்தால் 18 திவ்விய தேசங்களைச் சேவிக்கும் பேறு பெற்றேன். இரண்டாம் சுற்று 1968-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் என் மூத்தமகன் திரு S. இராமலிங்கத்துடன் திருக்கடிகை.திருஎவ்வுளூர்,திருநின்றவூர்.திருவல்லிக்கேணி ஆகிய எஞ்சியுள்ள 4 திவ்விய தேசங்களையும் சேவித்து. தொண்டை நாட்டுத் திருப்பதிப் பயணத்தைத் தலைக் கட்டலாம் என்பது என் திட்டம்; இறையருளும் இதனைக் கூடுவித்தது. (19) திருக்கடிகை : முதல் நாள் திருத்தணி முருகனைச் சேவித்த நாம் மறுநாள் அதிகாலையில் 5-30 பேருந்து மூலம் சோழ சிங்கபுரம் வருகின்றோம். இது திருத்தணிசித்துார் நெடுஞ்சாலையில் திருத்தணியிலிருந்து சுமார் 10 கல் தொலைவில் உள்ளது. ஊருக்குள் ஒரு விடுதியில் சிற்றுண்டி கொண்டு சுமார் 2 கல் தொலைவிலுள்ள மலையடிவாரத்திற்கு வருகின்றோம். அடிவாரம் கொண்ட பாளையம்' என்று வழங்கப் பெறுகின்றது. தெலுங்கும். தமிழும் கலந்து நிலவும் பகுதியாதலால் மலை என்று: பொருள்படும் கொண்ட' என்ற தெலுங்குச் சொல்லும் 'பாளையம்’ என்ற தமிழ்ச் சொல்லும் காதல் மணம் பூண்டு ஊர்ப் பெயராக அமைந்து கிடக்கின்றது. மலைமேல் ஏறுவதற்கு ஆற்றல் இல்லாததால் ரூ 7/-க்கு 'டோலி' யில் சென்றேன்; என்மகன் நடந்து வந்தான். சுமார் 45 நிமிடத் தில் மலை உச்சிக்குச் சென்றுவிட்டோம். இத்தலத்து எம்பெருமான் யோகநரசிம்மர் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக் கின்றார். இவரையும் தனிச் சந்நிதியில் கோயில் கொண்டுள்ள அமிர்த வல்லித் தாயாரையும் சேவிக் கின்றோம்; இந்த எம்பெருமானுக்குத் தக்கான்' என்றும் "அக்காரக் கனி என்றும் வேறு திருநாமங்களும் உண்டு.