பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 475 யோக நரசிம்மர் இருப்பது பெரியமலை, 45 நிமிடத்தில் கொண்ட பாளையத்திற்குத் திரும்பிவிடுகின்றோம். கொண்ட பாளையத்திலிருந்து சின்னமலை என்ற இடத்தில் தக்கானுக்கும் மிக்கானாக விளங்கும் யோக ஆஞ்சனேயர் திருக்கோயில் கொண்டிருக்கின்றார். இக் கோயிலில் நாங்கள் போன சமயம் திருப்பணி நடை பெற்றுக் கொண்டிருந்தது. எனக்கு மலை ஏற ஆற்றல் இல்லை. இராமலிங்கம் மட்டிலும் சென்று சிறிய திருவடியைச் சேவித்துத் திரும்பினான். வந்த குதிரை வண்டியிலேயே சோழசிங்கபுரம் திரும்பினோம். ஓர் உணவு விடுதியில் பட்டை சாதம் உண்டு திருஎவ்வுள்ளுர் வருகின்றோம். (20) திருவெள்ளுர்: "திருஎவ்வுள்ளுர்’ என்ற சொல் மருவி 'திருவெள்ளுர்’ என்று வழங்கி வருகின்றது. இது சென்னைக்கு வடமேற்கே 30 கல் தொலைவில் உள்ளது. திருப்பதி செல்லும் சில பேருந்துகள் இந்த ஊர் வழியாகச் செல்லுகின்றன. இந்த எம்பெருமான் மூலவர் எவ்வுள் கிடந்தான் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலங் கொண்டு சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக் கின்றான். இவனுக்கு அருகில் வடிவழகில் ஒப்புயர்வற்ற வீரராகவன் (உற்சவர்) உபயநாச்சியாருடன் சேவை சாதிக்கின்றான். பெருமாள் சந்நிதிக்குத் தெற்கு பகுதியில் தனிக் கோயில் கொண்டு சேவை சாதிக்கும் கனகவல்லித் தாயாரையும் சேவிக்கின்றோம். இவருக்கு வசுமதி என்ற மற்றொரு திருநாமமும் உண்டு. நகரப் பேருந்து மூலம் திருவெள்ளுர் இருப்பூர்தி நிலையத்திற்கு வருகின்றோம். இ ரு ப் பூ ர் தி மூலம் திருகின்றவூர் வருகின்றோம். (21) திருகின்றவூர் : சென்னை அ ர க் கோ ண ம் இருப்பூர்திவழியில் ஒரு தலம். நிலயத்தில் இறங்கி ஒரு