பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 6. நினைவுக் குமிழிகள்-4 கல் தொலைவு நடந்து திருக்கோயிலை அடைந்து கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் .ெ ப. ரி ய பிராட்டியார் பூமிப் பிராட்டியார் இவர்களுடன் சேவை சாதிக்கும் பக்தவத் சலரைச் (பத்தராவிப் பெருமாள்) சேவிக்கின்றோம். இத்தலத்திற்கு எந்த ஆழ்வாரும் வந்து தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்யவில்லை. அர்ச்சாவதார சேவா ரசிகரும் 86 திவ்விய தேசங்களைச் சேவித்த திருமங்கையாழ்வாரும் கூட இந்தத் திருத் தலத்துக்கு வரவில்லை. இது நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. ஆ ன ல், திருக்கடல் மல்லைத் தலசயனரை மங்களாசாசனம் செய்யும்பொழுது கின்றவூர் நித்திலத்தை (பெரி. திரு. 2. 5:2) என்றும் திருக்கண்ணமங்கை எம்பெருமா னு க் கு ச் சொல் மாலைகள் சாத்தும்பொழுது 'கின்றவூர் கின்ற நித்திலத்தொத்தினை (டிெ 7.10 15) என்றும் மங்களா சாசனம் செய்துள்ளதை நினைக்கின்றோம். இரண்டாவது துணுக்குப் பாசுரத்தில் அந்த எம்பெருமான் சேவை சாதிக்கும் திருக்கோலத்தையே காட்டுவதைக் கண்டு வியக்கின்றோம். ஆழ்வாரும் இந்த திவ்விய தேசத்திற்கு வந்து மங்களாசாசனம் செய்தது போன்ற பெருமை யையும் பெற்று விடுகின்றார். காஞ்சிப் பிரதிவாதிபயங்கரம் ஆசாரிய சுவாமிகளின் திவ்வியார்த்ததீபிகையில் கண்ட ஒரு திருக்குறிப்பு நினைவிற்கு வருகின்றது. ஆழ்வார் எவ்வுள் கிடந்தானைச் சேவித்த பின்பு திருவல்லிக்கேணிக்கு எழுந்தருள்வதற்கு முன்பே திருநின்றவூரைச் சேர்ந்தார்: அத்திருப்பதியில் எழுந்தருளியுள்ள ப த் த ர ா வி ப் பெருமாள் அப்போது ஆழ்வாருக்கு முகம் கொடாமல் பிராட்டியாரோடு சரச சல்லாபம் செய்து கொண்டு பராமுகமாக இருந்திடவே, ஆழ்வார் அத்திருப்பதியை விட்டு அப்பால் சென்று திருவல்லிக்கேணியையும்