பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் - 47? திருநீர்மலையும் சேவித்து, அதன் பின்னர் திருக்கடல் மல்லையை அடைந்து அத்தலத்துப் பெருமானைச் சேவித்து நிற்கும் .ெ ப ா ழு து, திருநின்றவூர் எம்பெருமான் தி ரு ம க ளா ல் தூண்டப் பேற்று. இவ்வாழ்வார் திருவாக்கினால் பாடல் பெற்றுச் சிறப்புறக் கருதிக் கடல்மல்லையில் வந்து சேவை சாதிக்க, இப்போது, நின்றவூர் நித்திலத்தை: .............. கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே (பெரி. திரு. 2. 5.2) என்ற திருநின்றவூர்ப் பத்தராவிப் பெருமானையும் இங்கே சேவிக்கப் பெற்றதாக அருளிச் செய்கின்றார்: என்பது பெரியோர்களின் நிர்வாகம்’’’ அடுத்து இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து சென்னை சென்று கந்தனடிமை எஸ்.பி. சண்முகம் பிள்ளையுடன் (6. பிலிப்ஸ்தெரு, சென்னை - :) தங்குகின்றோம். (22) திருவல்லிக்கேணி மறுநாள் நீராட்டம், சிற்றுண்டி முடித்துக் கொண்டு குரவமே கமழும் குளிர்பொழி லூடு குயிலொரு மயில்கள் நின் றாட இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியா திருவல்லிக்கேணி” பெரி. திரு. 3.3.7 வருகின்றோம். இத்திரு க் கோ யி ல் நிலவி வரும் சம்பிரதாயப்படி பார்த்தசாரதியைச் சேவிப்பதற்கு முன்பு வேதவல்லித் தாயார், வரதராசர், அழகிய சிங்கர் 8. பெரி. திரு. 2.5:2 (திவ்வியார்த்தீபிகை) 9. பெரி. திரு . 2.3:?