பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 & நினைவுக் குமிழிகள்-4 ஆ ண் டா ள், அரங்கநாதன், சக்கரவர்த்தி திருமகன் இவர்களையெல்லாம் முறையே சேவித்துக் கொண்டு பார்ஏறு பெரும்பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூது இயக்கிப் பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை' என்று மங்கைமன்னன் காட்டும பார்த்தசாரதியின் சந்நிதிக்கு வருகின்றோம். கருவறையில் கம்பீரமான நீண்டுயர்ந்த தோற்றத்துடனும் முறுக்கிய மீசையுடனும் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங் கொண்டு சேவை சாதிக்கும் மூலவர் வேங்கடகிருட்டிணனையும் உற்சவர் பார்த்தசாரதியையும் சேவித்து மகிழ்கின்றோம்.அன்று மாலையிலேயே திருப்பதி திரும்புகிறோம். திருப்பதியில் இருந்தபொழுது வகுப்பு வேலை ஆராய்ச்சி மாணவர்க்கான வேலை அலுவலக வேலை போக மீதி நேரத்தில் பெரும்பாலும் இரவு வேளைகளிலும் அதிகாலையிலும் தலங்களைச் சேவித்த அநுபவத்துடன் ஆழ்வார் பாசுர அதுபவங்களையும் சேர்த்து கட்டுரை களாக எழுதினேன். நடு நாட்டுத் திருப்பதிகட்கும் உரிய கட்டுரைகளையும் சேர்த்து 15 கட்டுரைகள் உருவாயின. இவற்றைத் தொண்டை காட்டுத் திருப்பதிகள் என்ற தலைப்பில் வெளியிட்டேன். இதற்கு அணிந்துரை வழங்கி ஆசி கூறியவர் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜஸ்டிஸ் என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள். இந்தப் பக்திப் பனுவலை சிறு வயதில் திருவேங்கடம் எ று அழைக்கப் பெற்ற டாக்டர் மு. வரதராசன் அவர்கட்கு, 10. பெரி. திரு. 2.10: 8