பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயண நூல் தோற்றம் 479. மங்கலப் புதினப் படைப்பினால் இளைஞர் மனத்தினைத் திருத்திய கலைஞன்; சங்கநூற் பொருளை யாவரும் உணரத் தகவொரு விளக்கிய செம்மல்; துங்கமார் மதுரைப் பல்கலைக் கழகம் துலக்குறும் தனித்துணை வேந்தன்: பங்கமில் உளத்தன; தூயநன் மு.வ. பண்பினுக் குரியதிந் நூலே அஎன்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன. 'தொண்டை நாடு சான்றோர் உடைத்து’ என்பர் பெரியோர், ஒரு சான்றோர் திருத்தலப் பயணத்திற்குப் வழிகாட்டியாக அமைந்தார்; மற்றொருவர் அணிந்துரை வழங்கினார்; மூன்றாமவருக்கு இந்நூல் அன்புப்படையலாக அமைந்தது. இவற்றை நினைவு கூரும்போது எல்லையற்ற மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றேன். இஃது என்னுடைய இருபத்தைந்தாவது வெளியீடு (ஆகஸ்டு-1973) குமிழி-215 59. அம்புலிப் பயணநூல் தோற்றம் நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாகவே இரவு நேரத்தில் ஒளியை அளித்து மக்களுக்குக் களிப்பினை யூட்டி வரும் சந்திரன் அவர்கள் கவனத்தைக் கவர்ந்து வந்திருக்கின்றான். பால் மணம் மாறாப் பச்சிளங் குழவி களும் வான்மதியின் அழகில் ஈடுபட்டுக் களிப்படைவதை நாம் இன்றுங் காணலாம். இளவேனிற் காலத்தில் மப்பு மந்தாரம் இல்லாத இரவு நேரத்தில் தாய்மார்கள்