பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* & O நினைவுக் குமிழிகன்-4 தங்கள் குழவிகளை ஏந்திக் கொண்டு 'அமுதளிக்கும் அம்புலி'யைக் காட்டி அகமகிழச் செய்வது இன்றுங் கண் கொள்ளாக் காட்சியாக இருந்து வருகின்றது. திங்களைச் சுட்டிக்காட்டி, நிலா நிலா வா வா நில்லாமல் ஓடி வா மலைமீது ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா என்ற குழந்தைப் பாடலால் மகிழ்வித்துக் கொண்டு. வருவதை இன்றும் நாம் காணலாம். இங்ங்ணம் அம்புவியில் வாழும் எல்லா நாட்டுக் கவிஞர்களும் அம்புலியின் வனப்பில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து இனிய பாடல்களை ஆக்கி உள்ளனர். தமிழ் மொழியில் பிள்ளைக்கவி’ என்று வழங்கப்பெறும் பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் மிகவும் பேர் போனவை. இதில் அம்புலிப் பருவப் பாடல்கள் புலமைக்கு விருந்தாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். தமிழ் இலக்கியத் தில் இத்தகைய பாடல்கட்கு முதன் முதலில் வித்திட்டவர் தாயுள்ளம் படைத்த பெரியாழ்வார் என்ற வைணவப் பெரியார். தாம் யசோதைப் பிராட்டியாக நின்று. பேசுவதாக அமைந்த பாடியவாய் தேனுாறும் பாசுரங்கள் சிந்தைக்கும் செவிக்கும் வாய்க்கும் அமுதாக இனிக் கின்றன. அம்புவியில் வாழும் மனிதன் அம்புலியை எட்டிப் பிடிக்க இயலாது என்றிருந்த காலம் மாறிவிட்டது. அமெரிக்க உருசிய அறிவியலறிஞர்களின் அயரா உழைப்பி னால் இன்று அம்புலியில் அடி வைத்து விட்டான் மனிதன். அது மட்டுமன்று. அம்புலிக்குப் பயணம் செய்வதுஅதனால் ஏற்படும் பயணங்களை ஆராய்வது-என்று இன்ன பிற ஆராய்ச்சிகள் விரைந்து நடைபெற்று