பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புவிப் பயண நூல் தோற்றம் 48 f வருகின்றன. நான் திருப்பதிக்கு வந்த நாள் முதல் (ஆகஸ்டு.1966) விண்வெளிச் செலவு பற்றிய செய்தி களில் மிகவும் அக்கறை கொண்டிருந்தேன். அமெரிக்கன் ரிப்போர்ட்டரும்', 'சோவியத் செய்தியும் இத்தகைய செய்திகளைத் தாங்கிக் கொண்டு வந்தன. Life என்ற ஆங்கில இதழிலும் இத்தகைய செய்திகள் வண்ணப்பட விளக்கத்துடன் வெளிவந்தன. Hindu, கல்கி, ஆனந்த, விகடன் என்ற இதழும் பருவவெளியீடுகளும் இத்தகைய செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தன. விண்வெளிப் பயணம்பற்றி ஆங்கிலத்தில் பல சிறிய பெரிய நூல்களும், வெளிவந்து கொண்டிருந்தன. சென்னை அமெரிக்க நூலகத்தின் துணைகொண்டு இந்த நூல்களைப் பெற்றுப் படித்து வந்தேன். 1961.இல் அமெரிக்க மக்கள் தலைவர் ஜான் கென்னடி 1970-க்குள் மனிதன் அம்புலியில் சென்று இறங்குவதை நமது இலட்சியமாகக் கொண்டு உழைப்போம்” என்று விட்ட அறை கூவல் அறிவியலறிஞர்களின் இதயத்தைத் தொட்டது. நம் நாட்டுக் கவிஞர் பாரதியாரும், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்.' என்ற கனவு கண்டார். இத்தகைய கனவினை மேற்புற நாடுகள்-குறிப்பாக அமெரிக்காவும் உருசியாவும்நனவாக்கி வந்தன. திட்டங்களை வகுத்துக் கொண்டு அவற்றைப் படிப்படியாக வெற்றியுடன் நிறைவேற்றி வந்தன. அமெரிக்காவில் (நாசா)(NASA) இயக்கத்தினைச் சார்ந்த அறிவியலறிஞர்கள் மூன்று திட்டங்களை வகுத்துக் கொண்டு செயற்பட்டனர். இந்த மூன்று திட்டங்களும் மனிதன் மதிமண்டலத்திற்குச் சென்று திரும்பும் வழிகளை குத்து அவற்றை வெற்றியுடன் செயற்படுத்துவதற் —i. பாரதியார் கவிதைகள்-பாரததேசம்-11 2. NASA–National Aeronautics and Space Administration. தி-31