பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 நினைவுக் குமிழிகள்-4 காகவே உருவாக்கப் பெற்றவை. இயல்பாகவே அறிவியல் துடிப்பையுடைய நான் இத்திட்டங்கள் செயற்படுவதைக் கூர்ந்து கவனித்து அவ்வப்போது வெளியான செய்திகளை யும் அறிவியல் கருத்துகளையும் குறிப்பெடுப்பதை வழக்க மாகக் கொண்டிருந்தேன். இந்த மூன்று திட்டங்களைப். பற்றியும் சுருக்கமாக விளக்கியுள்ளேன்." மெர்க்குரித்திட்டம் : ஒரு கூண்டுக்குள் ஒரு மனிதனை ஏற்றி அக்கூண்டினை விண்வெளிக்கு அனுப்பி அதனைப் பூமியைப் பலமுறை சுற்ற வர செய்து அதன் பின்னர் அதனைப்பூமிக்கு மீட்பதே இத்திட்டத்தின் நோக்கம்ஆகும் அமெரிக்கா ஒன்றன் பின் ஒன்றாக ஃபிரெண்ட்ஷிப்-7, அரோரா 7, சிக்மா-7, ஃபெயித்-7 என்ற நான்கு விண்கலங்களை அனுப்பி வெற்றி கண்டது. இந்த நான்கு விண்கலங்களும் திட்டமிட்டபடி கடலில் இறங்கியது. அங்கிருந்து விண்வெளி வீரர்கள் மீட்கப் பெற்றனர். உருசியாவிலும் இந்த விண்வெளிச் செலவு சுறுசுறுப் பாக நடைபெற்றது. அமெரிக்க வீரர்கள் விண்வெளியை அடைவதற்கு முன்னதாகவே உருசியா வாஸ்டாக்-1 என்ற விண்வெளிக்கலத்தின்மீது யூரிககாரின் என்பவரை விண்வெளிக்கு அனுப்பி அழியாப் புககழ்பெற்றது (1961 ஏப்ரல் 12 ஆம் நாள்), அடுத்து வாஸ்டாக்-2, 3, 4, 5, 6 விண்வெளிக் கலங்கள் விண்வெளிக்கு அனுப்பப்பெற்று அரிய சாதனைகள் புரிந்தன. ஜெமினித்திட்டம்: இத்திட்டம் அமெரிக்காவின் இரண்டாவது திட்டம் ஆகும். இது 1963-இல் தொடங்கப் பெற்றது. இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பெற்ற பன்னிரண்டு விண்வெளிச் செலவுகளில் முதலிரண்டுச் செலவுகள் ஆளில்லாத விண்வெளிச்செலவுகளாகும். 3. அம்புலிப் பயணம்-(கழகவெளியீ - ம் 29–83) (கழகெ டு) (பக்.