பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயண நூல் தோற்றம் 48霹 (ஜெமினி-1, 2,), ஜெமினி-3இல் இரண்டு விண்வெளி விiரர்கள் விண்வெளிக்குச் சென்று மூன்று முறை தங்கள் கலத்தைப் பூமியின் சுற்று வழியில் இயக் கினர். (1965-ஆம் ஆண்டு மார்ச்சு 23 -ஆம் நாள்). இத்திட்டதின்கீழ் மேற்கொள்ளப் பெற்ற பன்னிரண்டு விண்வெளிச் செலவுகளும் வெற்றியுடன் நிறைவேறின. அ புலியில் இறங்குவதற்குத் தேவையான எல்லாத் துறை-நுட்பச் சோதனைகளிலும் வெற்றி கண்டனர். விண்வெளியில் முன்னேற்பாட்டின்படி குறிப்பிட்ட இடத்தில் விண்வெளி வீரர்கள் சந்தித்தல், இரண்டு விண்வெளிக் கலங்களை இணைத்தல், மனிதன் நீண்டகாலம் தொடர்ந்து விண்வெளியில் இருத்தல்இவை இத்திட்டத்தின் முதல் நோக்கங்களாக இருந்தன. இவை இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப் பெற்ற விண்வெளிச் செலவுகளால் நிறைவேறின மனிதர்கள் விண்வெளிக் கலங்களைத் திறம்படக் கையாள முடியும் என்பது மெய்ப்பிக்கப்பெற்றது. மேலும், அவர்கள் ஒரு சுற்று வழியினின்றும் பிரிதொரு சுற்று வழிக்குச் செல்லல் விண்வெளிக் கலத்திற்கு வெளியில் ஒருவிதக் கட்டுப் பாட்டின்கீழ் விண்வெளியில் நடத்தல், சுற்றுவழியில் வேறொரு விண்கலத்தின் இருப்பிடத்தை அறிந்து. அதனைத் தொடர்ந்து சென்று அதனுடன் இணைதல், அம்புவிக்குச் சென்று திரும்புவதற்கு வேண்டிய கால அளவில் இரண்டு மடங்கு கால அளவிற்கு நீண்டகாலம் தொடர்ந்து விண்வெளியில் தங்குதலைச் சமாளித்தல் ஆகியவை இச்செலவுகளால் தெளிவாயின. உருசியாவும் விண்வெளிக் கலங்களை விண்வெளியில் இணைக்கும் செயலையும், அண்ட வெளியில் விண்வெளி வீரர்கள் தாம் இருந்த கலங்களினின்றும் இடம் மாறும் செயலையும் நிறைவேற்றி அழியாப் புகழ்பெற்றது. சோயுஸ் -4, 5, 6, 7, 8 என்ற விண்வெளிக் கலங்களைக் கொண்டு இச்செயல் நிறைவேறியது.