பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4&Ꮂ நினைவுக் குமிழிகன்-கி அப்போலோ திட்டம்: நாசா இயக்கத்தினர் வகுத்த மூன்றாவது திட்டம் இது. இதில் ஒரு மனிதனைப் பாதுகாப்பான விண்வெளிக் கலத்தில் திங்கள் மண்டலத் திற்கு அனுப்பி மீட்க வேண்டும். மனிதனைச் சந்திரனுக்கு. அனுப்புவதற்கு முன்னால் ப ைபடிகளில் சோதனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். இச்சோதனைளை முதலில் பூமியின் சுற்றுவழியில் செய்து பார்த்தல் வேண்டும். முதலில் ஆளில்லாத விண்கலங்களைக் கொண்டும், அதன் பிறகு மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்டும் இச் சோதனைகள் செய்யப்பெறுதல் வேண்டும். இத்திட்டத்தில் அப்போலோ-1 முதல் 17 வரை 17 கலங்கள் செயற்பட்டன. முதல் ஆறு கலங்கள் ஆளில்லாத பயணம் ஆகும். அப்போலோ-4 பயண ஒத்திகை நடை பெற்றபோது மூன்று விண்வெளி வீரர்கள் இறந்தனர். (1967-ஆம் ஆண்டு சனவரி 27-ஆம் நாள்), அப்போலோ-7 முதல் 17 வரை மேற்கொள்ளப் பெற்ற பயணங்கள் ஆளுள்ள பயணங்களாகும். இந்தப்பயணங்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவை அப்போலோ-8, 11 பயணங்களே. இந்த இரண்டு விண்கலங்களும் சாட்டான்-5 என்ற மாபெரும் இராக்கெட்டின் உதவியினால் விண்வெளிக்குப் செலுத்தப் பெற்றன. இவை கென்னடி முனையிலிருந்து செலுத்தப் பேற்றன. அப்போலோ-8 இன் விண்வெளிப் பயணம் ஈடும். எடுப்பும் அற்றது. இதுகாறும் கண்டு பிடிப்பிற்காக மேற். கொள்ளப் பெற்ற எந்தப் பயணமும் 147 மணிநேரம் பயணம் சென்ற இதன் பயணத்துடன் ஒப்பிடும் தகுதி யுடையதன்று. மேலும், இதுகாறும் ஆளுடன் சென்ற பதினேழு அமெரிக்க விண்வெளிப் பயணங்களோ இதற்கு நிகர் அன்று. காரணம், இவையாவற்றிலும் செனற விண்வெளி வீரர்கள் அனைவருமே பூமியின் சுற்று வழியிலேயே தங்கியிருந்தனர்; அன்றியும் அவர்கள் பூமி: யின் அருகிலேயும் இருந்தனர்.