பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயண நூல் தோற்றம் 48& அப்போலோ-8 இன் விண்வெளி வீரர்கள் இதுகாறும் மனிதர்கள் எட்டியிராத மணிக்கு 38,674 கி.மீ. வேகத்தை எட்டினர்; புவியின் ஈர்ப்பு விசைச் சூழலைத் தாண்டியபோது இஃது ஏற்பட்டது. இதுகாறும் மனிதர் கள் சென்றிராத தொலைவினை -3, 72, 800 கி. மீட்டர் கள்-இவர்கள் கடந்தனர். அம்புலியைச் சுற்றியபோது இது நேரிட்டது, முதன் முதலாக அம்புலியை வட்ட மிட்டதும், முதன்முதலாக பூமியின் ஈர்ப்புச் சூழலைக் கடந்ததும், முதன்முதலாக அம்புலியின் ஈர்ப்பு ஆற்றலைக் கண்டதும், முதன்முதலாகப் பூமியின் தொடர்பின்மையை முற்றிலும் அற்றதும், முதன் முதலாக அம்புலியின்மறு புறம் கண்டதும் இப்பயணத்தின்போதே நிகழ்ந்தது. இந்தப் பயணத்தில் எதிர்பாராமல் நேரிடும் விபத்து களைச் சமாளிக்க எடுத்துக் கொள்ளப் பெற்ற மாற்று ஏற்பாடு முக்கியமானது. எந்த ஏற்பாடு தவறாகப் போயினும், அதற்குப் பதிலாக இன்னொரு ஏற்பாடு தயாராக இருந்தது. 1967-இல் கென்னடி முனையிலுள்ள தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு மூன்று விண்வெளி வீரர்கள் பலியான பிறகு இப்போது விண் வெளிக் கலத்தின் உட்புறச் சாதனங்கள் எளிதில் தீப் பற்றாத பொருளால் உருவாக்கப்பெற்றுள்ளன. எந்த நெருக்கடியிலும் பூமிக்குத் திரும்பிவிட அமைப்புகள் இருந்தன. அம்புலி மண்டலத்திலிருந்து பூ மண்டலத் திற்குத் திரும்ப ஏற்படும் காலதாமதம் ஒன்றுதான் பிரச்சினையாக இருந்தது. 3. 2 இலட்சம் கி. மீ. க்கு மேலல்லவா கடந்து பூமிக்கு வரவேண்டும்? பூமியைச் சுற்றி வருவதற்கு மேற்கொள்ளப்பெற்ற பயணத்தில் ஒர் ஆபத்து நேரிட்டால் அதிக பட்சம் மூன்று மணி நேரத்தில் திரும்பி விட முடியும். ஆனால் அம்புலியைச் சுற்றி வரும் விண்கலம் பூமிக்குத் திரும்ப இரண்டு நாட் களுக்கு மேலாகும்.