பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நினைவுக் குமிழிகள்-4 கள் ஏதாவது இல்லாதவற்றைத் துணைவேந்தரிடம் சொல்வி நம் உறவைத் தெரிவிப்பார்கள். துணைவேந்தர் கோள்களை நம்புபவர். ரெட்டிகளைப்பற்றி கூறப்பெறும் புகார்கள் அவருக்கு வெல்லமாக இனிக்கும். அவரால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் உங்கட்குத் தொல்லைகள் தரலாம். நீங்கள் தென்பகுதியிலிருந்து பணிக்காக வந்துள்ளீர்கள். உங்களுக்கு ஏன் இந்த வம்பு? திருப்பதி அரசியலிலிருந்து நீங்கள் ஒதுங்கியே இருங்கள்' என்றார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் துணைவேந்தர் தந்த அறவுரையும் இப்போது திரு பலராம ரெட்டி தந்த எச்சரிக்கையும் எனக்கு வழி காட்டின; இவை இரண்டும் என் இயல்புடன் பொருந்தியனவாதலால் இவற்றைக் கடைப்பிடிப்பதில் எனக்கு யாதொரு சிரமமும் இல்லை. துறையூரிலிருந்த போது உள்ளுர்ப் பொது மக்களிடமும், சுற்றுப்புறச் சிற்றுார்ப் பெரியவர்களிடமும் நன்றாகப் ஆழஒனேன்; இந்தப் பழக்கம் புதிய உயர்நிலைப் பள்ளியின் மேம்பாடு பற்றியதாகவே இருக்கும். அவர்கள் பிள்ளை களின் கல்வி மேம்பாடு பற்றியே இருக்கும். காரைக்குடி யிலிருந்த போதும் நகரத்தார் வகுப்பைச் சேர்ந்த பெரிய வர்களிடம் பழகும் போதெல்லாம் அவர்களிடம் என் பேச்சு தமிழையொட்டியே இருக்கும். நகரத்தார் பெரு மக்கள் நல்ல பண்பாடுடையவர்கள்: தமிழ்ப்பற்று மிக்க வர்கள். பெரும்பாலோர் சைவர்கள். திருநீறு சந்தனப் பொட்டு இல்லாத பெரியவர்களைப் பார்க்க முடியாது. நான் பழகியவர்களில் பலர் சிவபூசை எடுத்துக் கொண்டவர்கள் குருமுகமாக. இவர்களில் இளைஞர்கள் செயல்திறம் மிக்கவர்கள் இதனால் காரைக்குடியிலிருந்த போதும் மிக்க செல்வாக்குடனும் புகழுடனும் என்காலம் சென்றது. பல நூல்களை ஆழ்ந்து கற்றலும் என் எழுத்தும் பணியும் பிறவழிகளில் காலத்தை வீணடிக்க இடம் தருவ