பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 நினைவுக் குமிழிகள்-4 அப்போலோ-11 இன் பயணம் மயிர் கூச்செறியக் கூடிய ஒரு மாபெரும் பயணம் ஆகும். இதில் பங்கு கொண்டவர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆஸ்டிரின், மைக்கல் கால்வின்ஸ் என்போர். இந்த மூவரிடமும் சில ஒற்றுமைகள் இருந்தன. மூவரும் 1930-இல் பிறந்தவர்கள்! மூவரும் 75. கி. கி. எடையை யுடையவர்கள்! இருவரின் உயரம் 378 செ. மீ. மற்றொரு வரின் உயரம் 175 செ. மீ! மூவரும் திருமணம் ஆகி. மக்கட் பேறு பெற்றவர்கள்! மூவரும் விமானம் கடவுவதில் நல்ல அநுபவம் உடையவர்கள்; நாலாயிரம் மணி நேரத் திற்குக் குறையாமல் விண்வெளியில் பறந்தவர்கள். மூவருமே முன்பு நடை பெற்ற விண்வெளிப் பயணங்களின் போது ஒவ்வொரு முறை பங்கு பெற்றவர்கள். இராக்கெட்டுத் தளத்திற்குச் சற்றுத் தொலைவில் பூமிக்கு அடியில் கட்டப் பெற்றுள்ள பிளாக் ஹவுஸ் (Block. house) என்ற மாபெரும் நிலவறை ஒன்றில் பல போறிஞர்கள் இருந்து கொண்டு தம் காதுகளில் அணிந்த தொலை பேசிகள் மூலமாகவும் மற்றும் பல கருவிகள் மூலமாகவும் விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொண்டு விண்கலத்தின் பல் வேறு விசைகள் இயங்கு வதை அடிக்கடி சரிபார்த்துக் கொண்டிருந்தனர். பெரிஸ்கோப் (Pariscope) என்ற கருவியைப் பயன் படுத்தியும் தொலைக் காட்சித் திரைகளிலும் இராக் கெட்டு செல்லும் வழியைக் கண்டு தெளிந்தனர். அப்போலோ-1 பயணம் தொடங்குவதைச் செய்தித் தாள் பொறுப்பாளர்கள் முதலானோர் இராக்கெட் தளத் திற்கு 5. கி. மீ. தொலைவிலிருந்துதான் கண்டுகளிக்க அதுமதி பெற்றனர். இராக்கெட்டுடன் சென்று விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும்விண் கலத்திலுள்ள விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொள்வதற்கென்று உலகின் பல பகுதிகளில்