பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயண நூல் தோற்றம் 487 கண்காணிப்பு நிலயங்கள் நிறுவப் பெற்றிருந்தன. இவற்றில் ஐந்து நிலையங்கள் அமெரிக்காவிலும், பத்து நிலையங்கள் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் முதலிய நாடு களிலும் இருந்தன. இவற்றைத் தவிர நான்கு கப்பல் களிலும் எட்டு விமானங்களிலும் கண்காணிப்பு நிலை யங்கள் இயங்கி வந்தன. விண்வெளி வீரர்கள் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் தொடர்பு வைத்துக் கொண்டே இருந்தனர். ஒவ்வொரு விநாடியும் இவர்களின் உடல் நிலை, கலத்தின் வேகம், அஃது இருக்கும் இடம், அதற்குள் உள்ள வெப்ப நிலை முதலிய பல எடுகோள் விவரங்களையும் இந்த நிலையங்கள் கண்காணித்து வந்தன. மனித வரலாற்றிலேயே மாபெரும் சிறப்புமிக்க இந்த விண்வெளிப் பயண ஏற்பாட்டினை உலகெங்கிலு முள்ள கோடிக் கணக்கான மக்கள் தொலைக் காட்சி மூலம் கண்டு களித்தனர்; வானொலிமூலம் கேட்டு மகிழ்ந்தனர், பூமியிலிருந்து மனிதர்கள் இன்னொரு விண் கோளுக்குச் செல்லும் இணையற்ற அருஞ் செயலுக்கு இணையாக இருந்தது; உலகமெல்லாம் இங்ங்னம் ஒரே சமயத்தில் ஒரு செய்தியினனக் கேட்ட சிறப்பு. இது இங்ங்ணம் அவர்கள் செய்திகளை அறிவதற்கு உடனுக் குடன் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்ய அட்லாண்டிக், பசிஃபிக், இந்திய மாக்கடல் கட்கு மேல் 'இண்டல் லாட்" செயற்கைக் கோள்கள் நிலையாக அமைக்கப் பெற்றி ருந்தன. மேலும் அம்புலித் தரையில் மனிதன் இறங்கப் போகும் இந்த விண்வெளிச் செய்திகளை அறிவித் தற்குப் பல நாடுகளின் வானொலி நிலையங்களும் ஒருங்கு இணைந்திருந்தன. வரலாற்றிலேயே மிகப் பெரிய வானொலி இணைப்பாகும் இது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒலிபரப்புக் கிளையும் உலகத்திலேயே மிகப் பெரிய அமைப்புமாகிய 'வாய்ஸ்