பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 நினைவுக் குமிழிகள்-4 ஆஃப் அமெரிக்க (வி. ஒ. ஏ.), பிரிட்டிஷ் பிராட் காஸ்டிங் காரிப்பிபாரேஷனுடனும் (பி. பி. சி.) மற்றும் பல வானொலி அமைப்புகளுடனும் இணைந்து இந் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பியது. பி. பி. சி. தன் உள் நாட்டு ஒலி பரப்புகளிலும் உலகளாவிய ஒலி பரப்பு களிலும் வி. ஒ. ஏ. யின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அப்படியே திரும்பவும் ஒலி பரப்பு செய்ய ஏற்பாடு செய் திருந்தது. தென் அமெரிக்க நாடுகளிலுள்ள 2600 வானொலி நிலையங்களும் வி. ஒ. ஏ. நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்ய ஏற்பாடு செய்திருந்தன. விண் வெளித் திட்டத்தை ஒளிவு மறைவு இன்றி உலகம் நன்கு பார்த்துக் கொண்டிருக்கும்படி நடைபெறச் செய்வதுதான் அமெரிக்காவின் சிறந்த மரபாக இருந்து வருவதை நாம் அறிவோம். தாய்க்கலமாகிய கொலம்பியாவும், அம்புலி ஊர்தி யாகிய கழுகும் இணைந்த வண்ணம் படிப்படியாகச் சந்திரனின் ஈர்ப்பு ஆற்றல் சூழ்நிலையை நெருங்கின. பிறகு அந்த ஆற்றலின் காரணமாகச் சந்திரனைச் சுற்றி வந்தன. நான்காம் நாள் அது சந்திரனில் இறங்க வேண்டிய நாள். அம்புலியில் இறங்கப் போகும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆஸ்டிரினும் தாங்கள் இருந்த கொலம்பியாவினின்றும் குகைபோன்ற ஓர் அமைப்பு வழியாக அம்புலி ஊர்தியினுள் நுழைந்து அதனை விண் கலத்தினின்றும் பிரிந்தனர். இப்போது இரண்டும் அம்புலியைச் சுற்றி வந்து கொண்டிருந்தன. தாய்க் கலத்திலிருந்து கொண்டே காலினிஸ் அம்புலியைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கீழாக அம்புலி ஊர்தியிலிருந்து கொண்டு ஏனைய இருவரும் அம்புலியைச் சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும்தாம் ஆறாம் நாள் சந்திரனில் இறங்கவேண்டும் என்பது திட்டம். சந்திரனுக்கு அண்மை உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்த கழுகி'லுள்ள சில விசைகளை இயக்கி