பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயண நூல் தோற்றம் 483 அதனை அம்புலித்தரையில் இறக்கினர். விண்வெளி வீரர் கள். இனிமையாக உண்டு அமைதியாக எட்டுமணி நேரம் உறங்கி ஒய்வு கொண்டனர். ஒய்விற்குப் பிறகு ஆர்மஸ்ட் ராங்கும் ஆல்டிரினும் விண்வெளி உடைகளை அணிந்து கொண்டனர். தம்மிடமிருந்து கிட்டத்தட்ட 112 கி.மீ. உயரத்தில் அம்புலியைச் சுற்றி வந்து கொண்டிருந்த மைக்கேல் காலின்சுடன் உரையாடினர். பூமியிலுள்ள அறிவியலறிஞர்களுடனும், தொடர்பு கொண்டனர். * இறங்கலாம்' என்ற கட்டளை கிடைத்ததும் கழுகின்’ கதவுகளைத் திறந்து கொண்டு முதலில் ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கினார்; பத்தொன்பது நிமிடத்திற்குப் பிறகு ஆல்டிரினும் அவருடன் வந்து சேர்ந்தார். இரண்டு விண்வெளி வீரர்களும் அண்ணாந்து நோக்கினர். பகலவன் அப்போதுதான் சந்திரனின் தொடு வானத்தில் தோன்றினான். தொலைவில் அரை வட்ட மாகப் பூமி காட்சியளித்தது. அதன் ஒரு பாதி பகலவனின் ஒளியால் ஒளிர்ந்தது; மற்றொருபாதி இருண்டு கிடந்தது. அம்புலியில் ஒரு பகல் பூமியில் பதினான்கு நாட்கள் என்பதையும் இரவும் அப்படியே என்பதையும் நாம் அறிவோம். வளிவண்டலமே இல்லாத அந்தப் பாழ்வெளி யில் பகலவனின் கதிர்கள் அம்புலியைக் கடுமையாகத் தாக்கும். ஆயினும், விண்வெளி உடை அணிந்திருந்த வீரர்கள் இருவரும் அந்தக் கடும் வெப்பத்தால் பாதிக்கப் பெறவில்லை. அம்புலித் தரையில் ஆர்ம்ஸ்ட்ராங் நடக்கத் தொடங் கினார். பூமியில் நடப்பதுபோல் அங்கு நடக்க முடியாது. இலேசாக கங்காருபோல் எழும்பிக் குதி த்து நடக்க வேண்டும். ஆர்ம்ஸ்டிராங் இதைப் பூமியில் எத்தனையோ முறை செய்து பழகியிருந்தமையால் இப்போது அவ்வாறு நடப்பது அவருக்கு எளிதாக இருந்தது. சந்திரனில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மூன்று மணிநேரம் என்ற