பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நினைவுக் குமிழிகள்-சி விகிதத்தில் அவர் பூமியிலேயே செயற்கையாக நிறுவப் பெற்ற சந்திர மண்டலச் சூழ்நிலையில் ஒத்திகை பார்த்துப் பழகியிருந்தார். விண்வெளி வீரராவதற்கு அவர் பெற்ற எத்தனையோ பயிற்சிகளில் இஃது ஒரு சிறு பகுதியே யாகும். ஆர்ம்ஸ்ட்ராங்கின் எடை 165 இராத்தல்; அவர் அணிந்திருந்த விண்வெளி உடையின் எடை 54 இராத்தல்; அவர் முதுகில் தூக்கிச் சென்ற உயிரியம் (Oygen), அடங்கிய அமைப்பின் எடை 120 இராத்தல். இத்தனை யும் சேர்ந்து அம்புலியில் 57 இராத்தல்களே! இந்த வேற்றுமை காரணமாக வழக்கம்போல் அவர் நடந்தால் தடுமாறி விழுந்துவிடக் கூடுமாதலால் மெல்லக் குதித்து. முன்னேற வேண்டியதாயிற்று. விரைவில் அவரும் அவர் தம் தோழரும் அமெரிக்கக் கொடி ஒன்றைச் சந்திரனில் நட்டனர். வளிமண்டலமற்றச் சூழ்நிலையில் அது பறக்காது என்ற காரணத்தால் நாலா பக்கமும் இழு. விசைக் கம்பிகள் கொடியை இழுத்துப்பிடித்து நீண்டிருக்கு மாறு அமைத்தனர். அடுத்து, அம்புலி மண்டலத்திலிருந்து சில பாறைகளைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகக் சேகரித்தனர். சில அறிவியற் கருவிகளைச் சந்திர மண்ட லத்தில் நிறுவினர்; ஒளிப்படங்கள் (Photographs) எடுத். தனர். சினிமா, தொலைக் காட்சிக் காமிராக்களை இயக்கிப் படங்கள் எடுத்தனர். ஆல்டிரினும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் அம்புலியில் தன்னந்: தனியாக இருந்த போதிலும் பூமியில் கோடிக்கணக்கான மக்கள் அவர்களுடனேயே இருக்கும் உணர்வைத். தொலைக்காட்சிமூலம் பெற்றனர். அவர்களுடைய. தலைக் கவசத்திற்குள் (Helmet) நுண்ணிய ஒலிவாங்கிகள் (Microphones) இருந்தன. சிறிய ஒலிபரப்புச் சாதனங். களை அவர்கள் முதுகில் சுமந்து கொண்டிருந்தனர். அம்புலி ஊர்தியிலும் ஒலி பரப்புக் கருவிகள் இருந்தன.