பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயண நூல் தோற்றம் 《9震 இவற்றால் அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் பூமியில் உடனுக்குடன் ஒலிபரப்பாயிற்று. மக்கள் அதனைக் கேட்டு மகிழ்ந்தனர். தொலைக்காட்சிக் காமிராவை அவர்கள் இயக்கத் தொடங்கியதும் உடனுக்குடன் அக்காட்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொலைக்காட்சிச் சாதனங்கள் உள்ள இல்லங்கள்தோறும் தெரிந்தன; அவர்கள் மக்கள் கண்டு மகிழ்ந்தனர். இதற்கு ஒலிபரப்புச் சாதனங்களுடன் உலகினைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் செயற்கைத் துணைக்கோள்கள் கைகொடுத்து உதவின. இந்த இரண்டு விண்வெளிவீரர்களும் அம்புலியில் 22 மணிநேரம் கழித்தனர். பின்னர் இவர்கள் கழுகில் ஏறிச் விசைகளை முடுக்கியதும் அந்த ஊர்தி மேலே கிளம்பிச் சந்திரனை வட்டமிட்டது; இதுகாறும் வட்டமிட்டுக் கொண்டிருந்த கொலம்பியா'வுடன் இணைந்து: கொண்டது. விண்வெளி வீரர்கள் இருவரும் மீண்டும் அம்புலி ஊர்தியிலிருந்து தாய்க் கலத்திற்குக் குறுகிய குகை. வாயில் வழியாக வந்து சேர்ந்தனர். அவர்களைக் காலின்ஸ் அன்பொழுக வரவேற்றார். இப்போது தேவை யற்ற "கழுகினைக் கழற்றி விட்டனர் அது தன்னந்தனி யாகக் சந்திரனை வட்டமிட்ட வண்ணம் இருந்தது. தாய்க் கலத்திலிருந்த மூன்று விண்வெளி வீரர்களும் அதிலுள்ள இராக்கெட்டுப் பொறியைத் தக்க சமயத்தில் இயக்கினர். விண்கலம் மேல் நோக்கிக் கிளம்பி விரைவில் அதன் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுப் பூமியை நோக்கி விரைந்தது. மணிக்கு 8,976 கி.மீ. வேகத்தில் அது வந்து கொண்டிருந்தது. இந்த விண்கலத்திலும் இருபகுதிகள் இருந்தன. பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தை நெருங்குவதற்குச் சற்று முன்னதாகத் தேவையற்ற ஒரு பகுதியை கழற்றிவிட்டனர். அது வளிமண்டலத்தைத் தாண்டும்போது உராய்வினால் அதிக வெப்ப மடைந்து எரிந்து சாம்பலாகிவிட்டது, விண்வெளி வீரர்கள் அமர்ந்