பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49.3 நினைவுக் குமிழிகள் -4 திருந்த பகுதிகள் மட்டிலும் மணிக்கு 40,000 கி.மீ. வேகத்தில் பூமியை நெருங்கியது. இந்த விண்கலம் வெப்ப மடைந்து எரிந்து சாம்பராகா திருக்க விண்கலத்தைச் சுற்றி வெப்பத் தடுப்புக் கவசம் ஒன்றிருந்தது விண்கலம் 5000° F வெப்பத்துடன் பழுக்கக் காய்ச்சியது போன்றிருந் தாலும், வீரர்கள் இருந்த அறை குளிர்ச்சியாகவே (81 °F) இருந்தது. விண்கலம் பூமியிலிருந்து 72,00 மீட்டர் உயரத்தி லிருந்தபோது இரண்டு குதிகுடைகள்விரிந்து கொடுத்துக் கலத்தின் வேகத்தைத் தணித்தன. 3000 மீட்டர் உயரத்தில் மேலும் மூன்று குதிகுடைகள் விரிந்து கொடுத்தன. இதனால் விண்கலம் அதிக அதிர்ச்சி யின்றிப் பசிபிக்மா கடலில் குறிப்பிட்ட இடத்தில் வந்து விழுந்தது. (வட்டமிட்ட வண்ணமிகுந்த ஹெலிகாப்டர் விமானங்களில் ஒன்று விண்வெளி வீரர்களை மீட்டு அருகிலிருந்த போர்க்கப்பலில் கொண்டு போய்ச்சேர்த்தது. மாலுமிகள் விண்கலத்தைப் பாதுகாக்கும் பொறுப் பேற்றனர். இந்த விவரங்களையும் இன்னோரன்ன பல ஏனைய விவரங்களையும் கொண்ட அம்புலிப் பயணம்' என்ற நூலை 1970 இல் அப்போலோ 11 பயணம் முற்றுப் பெற்ற சில திங்களில் பிறந்தது. பல்வேறு காரணங்களால் தவழ்ந்துவரக் காலந் தாழ்த்தது. அதனால் அப்போலோ - 12 முதல் 17 முடிவுள்ள பயணங்களைப் பற்றிய செய்தி களையும் தொடர்பாக இந்த நூலில் சேர்த்தேன். இதனால் இந்த நூல் அம்புலிப் பயணப் பற்றிய எல்லாக செய்திகளும் அடங்கிய ஒரு கருவூலம் ஆயிற்று. நூலும் கழக வெளியீடாக (திசம்பர்-1973) வெளி வந்தது. இஃது என்னுடைய இருபத்தாறாவது வெளியீடாக அமைந்தது.