பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 நினைவுக் குமிழிகள்-4 செய்தார். செயல் திறம்மிக்க இவருடைய சுறுசுறுப்பையும் மெய் வருத்தம் பாராதும், பசி நோக்காதும், கண் துஞ்சாதும், பணியாற்றும் திறமையையும் அறிந்த ஆந்திர மாநில அரசு திருவேங்கடவன் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பதவியை அளித்தது) பதவியேற்ற நாலாண்டுக் காலத்திற்குள் இங்குப் பல புதிய, துறைகளைப் பிறப்பித் தார். முதுகலையுடன் கூடிய தமிழ் ஆராய்ச்சித் துறையும் அவற்றுள் ஒன்று. பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் உறங்கிக் கிடந்த திட்டங்களையெல்லாம் உயிரியம் (Oxygen) ஊட்டிச் செயற்படச் செய்து மருத்துவ நிபுணத்துவத்தை ஆட்சி முறையிலும் காட்டின பெருந்தகை இவர். முதல் துணைவேந்தர் பேராசிரியர். எஸ் கோவிந்தராஜுலுவை விசுவகர்மா' என்றால், மூன்றாம் துணைவேந்தர் டாக்டர் ரெட்டியை மயன் என்று கூறலாம்.' இவருடைய அரும்பெரும் பணிச்சிறப்புகளைப் பல்கலைக் கழக வளாகத்தில் பல இடங்களிலும் காண லாம். பாண்டி மருத்துவ ஆராய்ச்சி நிலையமும், திருப்பதி பல்கலைக் கழகமும் இவருடைய நினைவுச் சின்னங் களாகத் திகழும் என்பதில் ஐயமில்லை' இவருடைய கடைக்கண் நோக்கு தமிழ்த்துறை பாலும் உண்டு ஆதலால் இவருடைய ஆட்சிக்காலத்தில் இங்குப் பணியாற்றப் பேறுபெற்ற நான் இவரது அரும்பெருஞ் சேவையின் நினைவாக இச்சிறு நூலை இவருக்கு மகிழ்ச்சியுடன் அன்புப் படையலாக்குகின்றேன். அமெரிக்கர்கள் அம்புலிப் பயணத்திட்டங்களை விரைவாக நிறைவேற்றினது போல் இவரும் பல்கலைக் கழக வளர்ச்சி பின் பயனுள்ள திட்டங்கனை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதால் இந்நூலை இவருக்குப் படைப்பது சாலப் பொருத்தமாகும் என்று கருதுகின்றேன்' 4. அம்புலிப் பயணம்-நூல்முகம்-பக் (6-7).