பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயண நூல் தோற்றம் 4势辱 இந்த நூல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையின் ஆதரவில் நடைபெற்ற ஒரு வெளியீட்டு விழாவில் (ஏப்பிரல்-1974) இதன் முதற்படியை இவரது துணைவியார் திருமதி இலக்கு மிடி. சகந்நாதரெட்டி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த விழா வில் டாக்டர் எம், அனந்தசயனம் அய்யங்கர் நூலை வெளியிட்டார்; பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் எம்.கே.இராமகிருஷ்ணன் தலைமை தாங்கி னார். விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது; இது புதிய தமிழ்த் துறைக்கும் ஒரு களையைத் தந்தது. இந்த நூல் என்னுடைய இருபத்தாறாவது வெளியீடு (திசம்பர்-1973). குமிழி-216 60. இரண்டு தங்கப் பதக்கங்கள் உலகில் நன்றாகப் பணியாற்றுபவர்கட்கு ஊதியம் உயர்த்தப் பெறுகின்றது; பதவி உயர்வும் கிடைக்கின்றது. இந்த உண்மையை அப்படியே வீட்டில் குழந்தையின் பெற்றோர்கள் கையாளுகின்றனர். விசிறி எடுத்துக் கொண்டவா, கற் கண்டு தருகின்றேன்' என்கின்றாள் அன்னை. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பொம்மை வாங்கித் தருவேன்' என்கின்றார் தந்தை. வீட்டில் முன்னறி தெய்வமாகிய அன்னையும் பிதாவும் கையாளு கின்ற முறையையொட்டியே ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையிலும் கற்றவிலும் இத்தகைய ஒரு முறையைக் கையாளுகின்றனர், தமிழ் எம்.ஏ. வகுப்பு தொடங்கப் பெற்றதும் (1970-71) முதலாவதாக முதுகலைப் பட்டம் பெறுபவர்களி ல்மொத்த மதிப்பெண்களில் முதலாவதாகப்