பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●● நினைவுக் குமிழிகள்-4 பேற்ற மாணவருக்கு ஒரு தங்கப் பதக்கமும், இலக்கியத் திறனாய்வுத் தாளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ ருக்கு ஒரு தங்கப் பதக்கமும் வைக்க வேண்டும் என்ற எண்ணம் என்ன சிந்தையில் தோன்றியது. இதனை நிறைவேற்றுவது எப்படி? ஏழுமலையான்தான் வழிகாட்ட வேண்டும். அவனை மனத்தில் இருத்தி திருவள்ளுவர் தங்கக் குழு, என்ற ஒரு குழுவை உருவாக்கினேன். அடியேன் பேருக்குத் தலைவன். சித்துரரில் திரு.இராசமாணிக்கம் செட்டியார் (வெல்லம் மண்டி) அவர்கள் செயலராகவும், திரு.A.K. ஆனந்தம் செட்டியார்(இராமர்கோயில், துணிக் கடை)பொருளாளராகவும் இருக்க ஒப்புக்கொண்டார்கள். இவர்களைத் தவிர திருப்பதியில் விசயராகவ அய்யங்கார், (கல்யாணம் அய்யங்கார்) டாக்டர் G. T. கோபாலகிருஷ்ண நாயுடு, சென்னை கந்தனடிமை எஸ். பி. சண்முகம்பிள்ளை கோட்டாத்துளர் K.N. நல்லப்ப ரெட்டியார் வேறு சிலர் குழு உறுப்பினர்களாகவும் இருக்க ஒப்புக் கொண்டனர். ரூ. 100, அதற்கு மேல் தொகைகள் ஏற்றுக் கொள்ளப் படும் என்று பல செல்வர்கள், நிறுவனங்கள் ஆகியோருக்கு வேண்டுகோள் அறிக்கைகள் அனுப்பப் பெற்றன. எதிர் பார்த்த அளவுக்கு யாரும் கொடுக்க முன் வரவில்லை. ஏதோ அத்தி பூத்த மாதிரி ஒன்றிரண்டு டிராப்டுகள் வந்து கொண்டிருந்தன. சித்துாரில் பாரத ஸ்டேட்வங்கியில் கணக்கு திறந்து அதில் தொகைகள் சேமிக்கப்பெற்றன. 1972-ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவருக்கே பதக்கங் கள் வழங்கப் பெறவேண்டும் (1973 பிப்பிரவரியில் நடை பெறும் பட்டம் அளிப்பு விழாவில்) என்ற குறிக்கோள் இருந்தமையால் நானும் திரு. P. சவுரிராஜனும் சித்துார் சென்று இராசமாணிக்கம் செட்டியாரைச் சந்தித்து அவர் அன்பளிப்பை வழங்குமாறு கேட்டோம். அவர் ரூ. 2001வழங்கினார். அவர் வழங்கியதைப் பார்த்து வேறு மூவர்