பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பயண நூல் தோற்றம் 玺97 வழங்குவர் என்ற சம்பிரதாயம் ஒன்று இருப்பதாகச் சுட்டிக்காட்டித் தொகையை அதிகப்படுத்துமாறு வேண்டி னோம். அவர் ரூ. 500; தந்தார். அப்படியே வேறு மூவர் ரூ. 500/- வீதம் வழங்கினர். வேறு சிலர் ரூ 50/- வழங்க முன் வந்தனர். அந்தத் தொகைகளையும் ஏற்றுக் கொண் டோம். அனைத்தையும் ஆனந்தம் செட்டியாரிடம் ஒப்படைத்தோம். அவர் அவற்றை வங்கியில் செலுத்தி விட்டார். இன்னும் ஒரு மாதத்தில் ரூ. 3500/-ம் அந்த ஆண்டு பதக்கத்திற்குரிய ரூ 500/-ம் ஆக 4000-ம் பல்கலைக் கழகத்தில் செலுத்த வேண்டியிருந்ததால் ரூ 2000/கடனாகத் தருமாறு இராச மாணிக்கம் செட்டியார் அவர்களைக் கேட்டேன். தேவையான தொகையைத் தேவையிருக்கும்போது தருவதாக வாக்களித்தார்; என் கடிதம் கண்டு ஆனந்தம் செட்டியாரிடம் தந்து விடுவ தாகச் சொன்ன்ார். நானும் திரு. சவுரிராசனும் திருப்பதி திரும்பினோம். கடைசி நாள் குறிப்பிட்டுப் பலருக்கு எழுதி யிருந்தமையால் நாங்கள் ஊர் வந்து சேர்ந்ததும் ரூ 2000/-க்கு மேற்பட்ட தொகைகள் டிராப்டுகளாக என் பேருக்கு அனுப்பியிருந்தார்கள். நான் அவற்றை வங்கி யில் செலுத்தி ஒரே செக்காக ஆனந்தம் செட்டியாருக்கு அனுப்பி வைத்து ரூ. 4000- க்கு ஒரு காசோலையைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பெயருக்கு எடுத்து என் பேருக்கு அனுப்புமாறு கேட்டு எழுதினேன், அவரும் அப்படியே அனுப்பி வைத்தார். நானும் பதிவாளருக்கு ஒரு கடிதத்துடன் இந்த ரூ. 4000/-க்குரிய காசோலை அனுப்பி வைத்தேன். கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செய்திகள் : (1) திருவள்ளுவர் Guuf di St Thiruvalluvar Gold Medal GTsörgy @ # săısı} பதக்கம் தமிழ் எம்.ஏ யில் முதல் வகுப்பில் முதலாவதாகத் தேறினவருக்கு வழங்கப்பெறுதல் வேண்டும். தங்கப் நி-32