பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 நினைவுக் குமிழிகள்-4 பதக்கம் பத்து காரட் தங்கத்தில் பத்து கிராம் எடை இருக்க வேண்டும் . ரூ 3500/- லிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு இது செய்யப் பெற லாம். நடப்பு ஆண்டு (1972)க்குத் தனியாக ரூ. 500/- , அனுப்பப்பெற்றுள்ளது. இதனை இந்த ஆண்டுக்குரிய தங்கப்பதக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.' 1972 சனவரியில் முன் பின் அறிமுகமாகாத பொள்ளாச்சி வள்ளல் திரு. கா. மகாலிங்கத்திற்கு புதி தாகத் தொடங்கப்பெற்று எம். ஏ. வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் இலக்கியத் திறனாய்வில் 68 விழுக் காட்டிற்குமேல் முதல் மதிப்பெண் பெறுபவருக்கு வழங்கும் படியாக ஒரு தங்கப் பதக்கத்திற்கு உதவ வேண்டும் என்று எழுதியிருந்தேன். அவரும் இப்போது வடலூரில் திருப்பணி வேலை நடைபெற்றுக் கொண் டுள்ளது. ஆறு திங்களில் இப்பணி நிறைவெய்தி விடும். அதன் பிறகு எழுதுக' என்று மறுமொழி தந்திருந்தார். அதன்படி 1972-ஜூன் மாதம் அவர் கடிதத்தை நினைவூட்டி மீண்டும் எழுதினேன். அவர் எவ்வளவு தொகை வேண்டும்?' என்று கேட்டு எழுதினார். நான் "நடப்பு ஆண்டு பதக்கத்திற்கு ரூ 500/ம் தொடர்ந்து ஆண்டு தோறும் வழங்கப்படவேண்டியதற்கு மூலதனமாக ரூ. 3500/-ம் தேவை: இந்தத் தொகையை (ரூ. 4000/-ஐ) திருவேங்கடவன் பல்கலைக் கழகப் பதிவாளர் பெயருக்கு டிராப்ட் எடுத்து எனக்கு அனுப் பினால் நலம்' என்று எழுதினேன். அங்ங்னமே வள்ளல் சொற்படி கோவையிலுள்ள, சக்தி சுகர்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து ரூ 4000/-க்குப் பதிவாளர் பெயருக்கு உள்ள டிராப்ட் வந்தது. அதனை அப்படியே கோவையி லிருந்து வந்த கடிதத்தின் நகலுடன் பதிவாளருக்கு அனுப்பி விட்டேன். திருவள்ளுவர் தங்கப்பதக்கத்தைப் போல, இராமலிங்கர் பேரில் ஒரு பதக்கம் (S. Ramalinga Swamigal Gold Medal)arsārgy spasiólost gy argo &aol-Gl-sir.