பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கருத்தரங்கு #93 1972 தேர்வில் மொத்த மதிப்பெண்களில் முதல் வகுப்பு மதிப்பெண்கள் பெற்று முதலாவதாகத் தேர்ந்தவர் தேவசங்கீதம் என்பவர்: இலக்கியத் திறனாய்வில் முதல் வகுப்பு மதிப்பெண்கள் பெற்று முதலாவதாகத் தேர்ந்தவர் சாமுவேல் என்பவர். இருவருக்கும் 1973 பிப்பிரவரியில் நடை பெற்ற பட்ட மளிப்பு விழாவில் பட்டங்களுடன் தங்கப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. இந்தத் திட்டம் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து செயற்பட்டு வரு கின்றது. பதக்கங்கள் பெற்ற மாணவர்களின் பெயர்கள் பெற்ற ஆண்டுடன் பெயர்ப் பலகைகளில் பொறிக்கப் பெற்று துறையில் வைக்கப்பெற்றுள்ளன. திருவள்ளுவர் தங்கப் பதக்கத்திற்காகத் தண்டப் பட்ட பணத்தில் ரூ 2100/- மீதி இருந்தது. சித்துார் பாரத ஸ்டேட்டு வங்கியில் இருந்து வந்தது. அதனைப் பயன் படுத்திய முறையைப் பின்வரும் குமிழியொன்றில் விளக்குவேன். குமிழி-217 61. திருக்குறள் கருத்தரங்கு முதலாண்டு (1970-71) முழுவதும் ஆசிரியர்கள் நியமனத்தில் துணைவேந்தர் டாக்டர் சகந்நாதரெட்டி அவர்கள் நடந்து கொண்ட முறை என் மன அமைதியைக் கெடுத்தது. என்றாலும் மன உறுதியுடன்-மன அமைதி யுடன் - பணியாற்றினேன். சனவரியில் ( 1971) தான் திரு P. செளரிராசன் விரிவுரையாளராகச் சேர்ந்தார். வேலை பளு சிறிது குறைந்தது. மாணாக்கர்களை நன்கு