பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翡鲁鲁 நினைவுக் குமிழிகள்-4 கவனித்துத் தேர்வுக்கு அனுப்ப முடிந்தது. இரண்டாவது ஆண்டு முழுவதும் தேர்வில் வெற்றியடையும் முதல் மாணவர்க்கு தங்கப் பதக்கங்கள் வைக்கும் முயற்சியில் முழுக் கவனத்தையும் திருப்பவேண்டியதாயிற்று. முன் றாவது ஆண்டில்தான் பாடங் கற்பிக்கும் பணியைத் தவிர பிற பொதுப்பணியில் கவனம் செலுத்தினேன். 1972 - 73 இல் கூட இதில் தனிக் கவனம் செலுத்த முடியவில்லை; ஒரளவுதான் கவனம் செலுத்த முடிந்தது. எனினும் பொதுவான இலக்கியப்பணி என் மனத்தில் கால் கொண்டது. 1973-74 ஆண்டில் கருத்தரங்கு பற்றிய சிந்தனை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. கருத்தரங்கு நடைபெற வேண்டியதற்குப் பணம் வேண்டுமல்லவா? திரு இராகவரெட்டி என்பவர் வளர்ச்சித்துறை (Development) அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைச் சந்தித்துத் தமிழக அரசு தந்த மானியத்தில் ஏதாவது மீதி இருக்கின்றதா என்று வினவினேன். முதல் மூன்று ஆண்டுகளில் கிடைத்த மானியத் தொகைகளை ஆசிரியர் மேசை, நாற்காலிகள், நூல்கள் வைப்பதற்கும் அலுவலகப் பதிவேடுகள் வைப்பதற்கும், பீரோக்கள்; வகுப்பறையில் மாணவர்கட்கு இருக்கை வசதிகள்இவற்றிற்காக செலவு செய்து கொண்டிருந்ததால் நிதி இருப்பைப் பற்றி விசாரிக்க நேர்ந்தது. அவரும் 4000/மேல் இருப்பு இருப்பதாகச் சொன்னார். ஏதாவது துறைச் செலவுக்குத் தேவைப்பட்டால் எழுதுமாறும் சொன்னார். அவர் சொற்படி கருத்தரங்கு நடத்து வதற்கு ரூ.3000/-தருமாறு எழுதினேன். கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. என்ன பொருள் பயிற்சி கருத்தரங்கு நடத்துவது என்பதைப்பற்றிச் சிந்தித்தேன். உலகுக்கென்று ஒரு