பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கருத்தரங்கு 5 () է நூலை அளித்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. இது குறித்துத் தமிழ் மக்கள் பெருமை அடையலாம்.இத்தகைய பெருமை திருவள்ளுவருக்கு உண்டு; இவரைத் தமிழ் நாட்டளவில் கட்டுப்படுத்தலாகாது. அது தளையாகும்: சிறையுமாகும். வள்ளுவன் தன்னை உலகினுக்-கேதந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாரதியாரும் பாடியுள்ளாரல்லவா? திருக்குறள் *உலக நூல்' என்பதற்கு திருக்குறளிலேயே சான்றுகள் உள்ளன. அறமும் பொருளும் இன்பமும் ஒரு சமயத் தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒருநாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்குப்உலகுக்குப்-பொது நூலிலும் தொடக்கம் முதல் இறுதி வரை பொதுமைப் பொருளுணர்த்தும் சொற்களும் சொற் றொடர்களும் தக்க இடங்களில் பளிச்சிடுகின்றன. இக் குறிப்புகள் நூலை உலக நூல் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. ஆகவே, இந்த நூலைக் கருத்தரங்குப் பொருளாகத் தேர்ந்தெடுத்தேன். இதுவே தமிழ்த்துறை யின் முதல் கருந்தரங்கில் ஆயப்படவேண்டும் என்பது என் ஆசை. கருத்தரங்கு நிகழ்ச்சிகள் முழுவதும் ஆங்கிலத் தில் அமைதல் வேண்டும் என்பது என் ஆசை. அஃது இயல. வில்லை . தொடக்க விழர் நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலத் தில் அமைந்தன. ஏனைய நான்கு அமர்வுகளில் ஒரு சில: ஆங்கிலக் கட்டுரைகளும் வந்தன: அவ்வளவே. பல்கலைக் கழக முறைப்படி-மரபுப்படி-துணைவேந்தர் தலைமை வகிப்பார். வள்ளுவனுக்கே தம் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துத் தம் மகனுக்கு வள்ளுவன் என்ற பெயரையும் இட்டு மகிழ்ந்த தாமரைச் செல்வர் நெ. து. சுந்தரவடிவேலு (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்) அவர்கள் கருத்தரங்கைத் தொடங்கி 1. பா. க : செந்தமிழ்நாடு-7