பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔●露 நினைவுக்குமிழிகள்-4 வைக்க, என் அருமை நண்பர், கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கர்-பிரபல வழக்குரைஞர், பல பேருந்துகளின் உரிமையாளர்-1952-57 வரை சென்னை சட்டமன்ற உறுப்பினர் - P.அரங்கசாமி ரெட்டியார் வள்ளுவர் படத்தைத் திறந்துவைக்க தவத்திருகுன்றக்குடி அடிகளார் ஆசி கூற தொடக்க விழா அமர்வு அற்புதமாக அமைந்தது. அடுத்து அமைந்த 4 அமர்வுகள் (1) திருக்குறள்கலையும் அறிவியலும் (2) தமிழ் இலக்கியத்தில் திருக்குறள் (3) திருக்குறளும் சமயமும் (4) திருக்குறளும் பிறமொழி இலக்கியங்களும் என்று அமைந்து ஒவ்வொன்றி லும் ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப் பெற்றன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆந்திரம் ஆகிய நான்குப் பகுதிகளிலுள்ள அறிஞர்களும் நிகழ்ச்சிகட்கு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியது கருத்தரங்கிற்குப் பொலிவும் பெருமையும் அளித்தன. பல்கலைக் கழக வளாகத்தில் "தமிழ்த்துறை' என்ற ஒன்று உண்டு என்பதை ஆந்திரத் திற்குப் பறை சாற்றின. மிக்க சிரமத்துடன் அறிஞர்களின் கட்டுரைகளின் எழுத்து வடிவத்தைப் பெற்றேன். இந்த அநுபவத்தைப் கருத்தரங்கு அமைப்பாளரே நன்கு அறிவார் இக்கட்டுரை களை நூல் வடிவம் பெறச் செய்ய வேண்டும் என்பது என் ஆசை, இதற்குப் பணம் வேண்டுமே, வெறுங்கையால் எப்படி முழம் போடுவது? பைந்தமிழ்ப்' பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டல் ஏழுமலையான் வழி காட்டினான். என் அரிய நண்பர் கந்தன் அடிமை எஸ்.பி. சண்முகம் பிள்ளையவர்களைச் செலவு போட்டு அச்சடிக்க வேண்டினேன். ஒப்புக் கொண்டார். தமிழ்ப் புத்தகாலயம், பாரிநிலையம், கழகம்-இவர்கட்கு எழுதி 100 படிகளை உடனே ஏற்குமாறும், அவற்றின் விலையை (100 x 6 = 600) முன் பணமாகத் தருமாறும்வேண்டினேன். முதலிருவர் வேண்டியவாறே தந்தனர்; கழகம் விற்றுதான் தரமுடியும் என்று தெரிவித்தது. இந்த விவரங்களைப்