பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கருத்தரங்கு 503 பல்கலைக் கழகத்திற்குத் தெரிவித்து நூலாக வெளியிட இசைவும் பெற்றேன், இந்த ஏற்பாட்டில் அச்சுக்கூலி போக மீதி ஏதாவது வரும் வருமானத்தைப் பல்கலைக் கழகத்தில் ஒப்படைக்கப்படும் என்ற குறிப்பையும் காட்டியிருந்தேன், நூலும் வெளியாயிற்று. விலை ரூ 6| என்று வைக்கப் பெற்றது. 25% கழிவு போக தமிழ்ப் புத்தகாலயத்தி லிருந்து பெற்ற ரூ.450|யும், பாரிநிலையத்திலிருந்து பெற்ற ரூ.450|யும் அச்சுக் கூலி, தாள்விலை இவற்றிற்குத் தரப்பெற்றன. கழகம் தரும் பணம் மெதுவாகத் தான் வரும் என்று சண்முகம்பிள்ளையிடம் தெரிவித்தேன்; அவரும் ஒப்புக் கொண்டார். இப்படியாக பகீரதப்பிரயத்தனமாக நூல் வெளிவந்தது. 500 படிகளே அச்சிடப் பெற்றன. இப்படியாகத் திருக்குறள் கருந்தரங்குமலர் -1974 ஆண்டி கட்டிய மடம்போல் வெளிவந்தது. இதில் என் வரவேற்புரை (ஆங்கிலம்), டாக்டர் ஜகந்நாதரெட்டியின் தலைமையுரை (ஆங்கிலம்), நெ.து சுந்தரவடிவேலுவின் பாராட்டுரை (ஆங்கிலம்)திரு P. அரங்கசாமி ரெட்டியாரின் உரை (ஆங்கிலம்), தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் ஆசியுரை (தமிழ்) ஆகியவை இடம் பெற்றுள்ளன. எல்லாக் கட்டுரைகளும் அவரவர்களின் பெயர்களுடன் இடம் பெற்றுள்ளன. தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக ஆந்திரம்முழுவதும் பரவலாக வாழும் எல்லா நிலைத் தமிழ் அன்பர்களை அன்புடன் போற்றிக் கலந்து மகிழும் ஆந்திர சகோதரர் கட்கு இந்நூலை, செந்தமிழ்த்தாய் இதயத்தே முகிழ்த்தெ ழுந்த சீர்சான்ற கோபுரங்கள் சமயச் சோலை விந்தைமிகு சிற்பங்கள் யாவும் அன்று வீசியவெம் புயலாலே அழிந்தி டாமல்