பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷{}4 நினைவுக் குமிழிகள்-4 சந்தமுறும் இமயம்போல் நிமிர்ந்து நின்று தகவுடனே காத்தபரம் பரையில் வந்து சிந்தைவளர் ஆந்திரர்க்குக் கனிவி னோடு திறஞ்சான்ற இந்நூலைச் சமர்ப்பிக் கின்றேன். என்ற பாடலால் அன்புப்படையலாக்கி மகிழ்ந்தேன். இந்த நூல் என்னுடைய இருபத்து ஏழாவது (ஜூலை1974) வெளியீடாகும் (பதிப்பு). 1974 பிப்பிரவரியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சிகளை ஐந்தே மாதத்தில் வெளியிடத்துணை புரிந்த, குன்றின் மீது விளக்காக, கோயில் கொண்டிருக்கும் வேங்கடத்தெம்மானை மனம் மொழி மெய்களால் சிந்தித்து வாழ்த்தி, வணங்கு கின்றேன். வெறுங்கையால் முழம் போடுவதற்கு வழி யமைத்துத் தந்த அந்தத் தமிழ்க் காதலன் என் நெஞ்சை விட்டு நீங்காது நிலைத்துவிட்டான். குமிழி-218 52. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நிகழ்ச்சிகள் | • 1973-ുഖച് என்று நினைக்கின்றேன் . பேராசிரியர்ரர். பி. சேது பிள்ளை வள்ளிவிழா அறக் கட்டளைச் சொற்பொழிவுகளைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்துமாறு பதிவாளரிடமிருந்து அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் இரண்டு அல்லது மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினால் அது நான் திருப்பதியில் பணியாற்றுவதற்குப் பொருத்தமாகவும் இருக்கும் என்று